பள்ளி வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச வீடியோ.. கணித ஆசிரியரின் மோசமான செயல்.. வளைத்து பிடித்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை திருமங்கலத்தில் ஆன்லைன் வகுப்பின்போது ஆபாச வீடியோ அனுப்பிய புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவ மாணவிகள் மற்றும் அவரது பெற்றோரின் செல்போன் எண்கள் இருக்கும் வாட்ஸ்ஆப் குரூப்பில் ஆபா வீடியோக்களை அனுப்பியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் தந்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணித ஆசிரியர் கம்பி எண்ணி வருகிறார்.

வகுப்புகளுக்கான வாட்ஸ்ஆப் குழுக்கள்

வகுப்புகளுக்கான வாட்ஸ்ஆப் குழுக்கள்

கொரோனா சூழல் காரணமாக பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று தணிந்ததால் அரசு உத்தரவின்படி அனைத்து பள்ளிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. மற்ற நேரங்களில் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் வகுப்பு தொடர்பாக மாணவர்களுக்கு பாடம் நடத்த எல்லா தனியார் பள்ளிகளிலும் வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே கலந்துரையாடல்கள் நடைபெறும். மாணவ மாணவிகளும் தங்களது வீட்டுப்பாடங்கள், தேர்வு சம்பந்தமான கேள்வி பதில்கள் மற்றும் சந்தேகங்கள் அனைத்தையும் இந்த குழு மூலம் நிவர்த்தி செய்து கொள்கின்றனர். அதே சமயம் ஒரு மாணவர் கேட்கும் சந்தேகத்திற்கான பதில்கள் வாட்ஸ்ஆப் குழு மூலமாக மற்ற மாணவர்களுக்கும் சென்றடைந்துவிடுகிறது. எனவே வாட்ஸ்ஆப் குழுக்கள் ஒரு வகுப்பறை என்றே சொல்லலாம்.

பாலியல் தொல்லை என புகார்கள்

பாலியல் தொல்லை என புகார்கள்

ஆனால் சமீப காலமாக இந்த வாட்ஸ்ஆப் குழுக்களில்தான் மாணவிகளுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்ஆப் குழுவில் உள்ள மாணவிகளுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்புவது, காதல் வலை வீசுவது, ஆபாசமாக பேசுவது, ஆபாச வீடியோக்கள் பகிர்வது என தில்லலாலங்கடி வேலைகளை செய்து வருகின்றனர். இந்த விவகாரம் முதலில் சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி மூலம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. இப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாகவும், மாணவிகளின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆபாச தகவல்களை அனுப்புவதாகவும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் 2021 ஜூன் மாதம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க சில அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளுக்கு நேரடியாக பாலியல் தொல்லை தந்ததால் அந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட பரிதாப நிகழ்வுகளும் கோவை, கரூர், சென்னை போன்ற நகரங்களில் நடந்துள்ளன.

சென்னை திருமங்கலம் பள்ளி

சென்னை திருமங்கலம் பள்ளி

இந்நிலையில் சென்னை திருமங்கலத்தில் செயல்படும் லியோ எனும் தனியார் பள்ளி கணித ஆசிரியர் வாட்ஸ்ஆப் குழுவில் ஆபாச வீடியோக்கள் அனுப்பிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலத்தில் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ ஆகிய இரண்டு பாடத்திட்டங்களையும் கொண்டுள்ள லியோ எனும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்த மதிவாணன் இந்த பள்ளியில் 10 ஆண்டுகளாக கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் மதிவாணனின் வகுப்பில் உள்ள மாணவ மாணவிகள் ஆசிரியர் இடையேயான உரையாடல்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் குழுவில் 60 மாணவ, மாணவியர் மற்றும் பள்ளியின் முதல்வர் ஜெஸ்லி சாரதியும் இருக்கின்றனர்.

வாட்ஸ்ஆப்பில் ஆபாச வீடியோ

வாட்ஸ்ஆப்பில் ஆபாச வீடியோ

நேற்று முன்தினம் இந்த வாட்ஸ்அப் குரூப்பிற்கு மதிவாணன் செல்போன் எண்ணிலிருந்து இரண்டு ஆபாச வீடியோக்கள் அடுத்தடுத்து வந்துள்ளது. இதை பார்த்த மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திரண்ட பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து மதிவாணன் நேரில் அழைக்கப்பட்டு பள்ளி முதல்வர் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் ஆபாச வீடியோக்களை வேண்டும் என்றே அனுப்பவில்லை என்றும் கைதவறுதலாக பார்வேர்ட் செய்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத பள்ளி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துவிட்டது. இது மட்டுமின்றி மதிவாணன் மீது திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறுதலாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மதிவாணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆபாச வீடியோக்களை செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ அல்லது இன்னபிற எலக்ட்ரானிக் சாதனங்களில் வைத்திருக்கக்கூடாது, பகிரக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கும் நிலையில், ஆசிரியர் அந்த வீடியோக்களை செல்போனில் வைத்திருப்பதே தவறு என ஆசிரியருக்கு தெரியாதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆபாச வீடியோ மூலம் மாணவிகளை கணக்கு பண்ணலாம் என நினைத்த கணக்கு டீச்சர் கம்பி எண்ணிக்கொண்டிருப்பதாக சமூகவலைதள வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+