சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டீம் 72.. இப்போ இதுதான் முக்கியம்.. சூட்டோடு சூடாக ஸ்டாலின் தரும் முக்கிய "டாஸ்க்".. குறி யாருக்கு?

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தனியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக உட்கட்சி தேர்தல் கிளைமேக்ஸை நெருங்கி உள்ளது. ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது.

ஜனநாயகப்படி தேர்தல் நடைபெற்றாலும்.. பெரிதாகும் எங்கும் மோதல் இல்லாமல் சமரசம் செய்து, போட்டியின்றி தேர்தல் நடைபெற்று இருக்கிறது.

PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் 1991 போல திமுக அரசு டிஸ்மிஸ்-பாஜக எச்.ராஜா பகிரங்க மிரட்டல் PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் 1991 போல திமுக அரசு டிஸ்மிஸ்-பாஜக எச்.ராஜா பகிரங்க மிரட்டல்

அடுத்த தேர்தல்

அடுத்த தேர்தல்

மாவட்ட செயலாளர்கள் தேர்தல் முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தல்கள் நடக்க உள்ளன. இதற்காக அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் புதிய தலைவர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு அதிகாரபூர்வமாக தேர்தல் என்று அறிவிக்கப்பட்டாலும், புதிதாக இதில் யாரும் போட்டியிட போவது இல்லை.

யார் போட்டி

யார் போட்டி

திமுக தலைவராக மு க ஸ்டாலின், பொருளாளராக டிஆர் பாலு, பொதுச்செயலாளராக துரைமுருகன் ஆகியோர்தான் தொடர்வார்கள். காலியாக உள்ள ஒரு துணை பொதுச்செயலாளர் பதவிக்கான நியமனம் மட்டும் இந்த பொதுக்குழுவில் செய்யப்படும். இதற்கான ரேஸில் கனிமொழி எம்பி முன்னிலையில் இருக்கிறார். இந்த நிலையில்தான் நேற்று மாவட்ட செயலாளர்கள் தேர்விற்கான அறிவிப்பு வெளியானது.72 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

72 மாவட்டங்களில் மொத்தம் 45 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 27 மாவட்டங்களில் பலர் மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்டனர். ஆனால் இதில் பல மாவட்டங்களில் போட்டியாளர்களை முன்மொழிய போதிய நிர்வாகிகள் இல்லை. இதனால் பெரும்பாலும், எங்கும் போட்டியின்றி பழைய நிர்வாகிகளே நியமனம் செய்யப்பட்டனர். 7 மாவட்டங்களில் மட்டுமே புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

 மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில்தான் மாவட்ட செயலாளர்களை விரைவில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. பொதுக்குழுவிலேயே கட்சி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்திப்பார் என்றாலும், இதில் அரசியல் ரீதியான வியூகங்கள் குறித்து ஆலோசனைகள் செய்யமுடியாது. இதனால் சட்டசபை கூட்டத் தொடருக்கு முன்பாக மாவட்ட செயலாளர்களை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் சட்டசபை கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதற்கு முன்பாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கியமான 3 விஷயங்கள் ஆலோசனை செய்யப்படலாம் என்றும் திமுக வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. முதல் விஷயம்.. மாற்று கட்சி தொண்டர்களை திமுக பக்கம் இழுப்பது. முக்கியமாக மாற்று கட்சியில் இருந்து திமுக வந்து மாவட்ட செயலாளர்கள் ஆனவர்கள்.. இந்த பொறுப்பை எடுத்து செய்ய வேண்டும். தொண்டர்களை பலத்தை ஆதரிக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தொண்டர்கள்

தொண்டர்கள்

இது போக 2024 லோக்சபா தேர்தலுக்கு இப்போதே தயாராவது. இதற்கு பாஜக வேகமாக தயாராக தொடங்கிவிட்டது. களப்பணி மட்டுமே தேர்தல் நேரத்தில் உதவும் என்பதால் உள்ளூர் அளவில் எம்பி தேர்தலுக்கான பணிகளை தொடங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம். கடைசி விஷயமாக.. உட்கட்சி மோதல்களை சரி செய்வது. 65 மாவட்டங்களில் அதே மாவட்ட செயலாளர்கள்தான் என்பதால்.. உட்கட்சி ரீதியாக அவர்களுக்கு எதிராக அதிருப்தியை பேசி இதில் தீர்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Team 72: What is the CM Stalin will do next as inside election of comes to climax?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X