Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலிக்கு தங்கம் திட்டம் ரத்தா? கேட்ட நிருபர்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதிலை பாருங்க

அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கத்தை சரியாக தரவில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 தருவதன் மூலம் தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கத்தை சரியாக தரவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் 2022- 2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு,மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

பெண்கள் உதவித்திட்டங்கள்

பெண்கள் உதவித்திட்டங்கள்

தமிழகத்தில் வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களுக்கு ஈவேரா மணியம்மையார் நினைவு திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான அன்னை தெரசா அம்மையர் நினைவு திட்டம், விதவையர்கள் மறுமணத்திற்கான டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் ஆகிய திட்டங்களில் எவ்வித மாற்றமும் இன்றி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாலிக்கு 8 கிராம் தங்கம்

தாலிக்கு 8 கிராம் தங்கம்

8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது.

 உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றம்

உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றம்

இந்நிலையில் தற்போது பட்ஜெட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாலிக்கு தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கு பதில், இனி உயர்கல்வி உறுதி திட்டம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மட்டும், மாதம் ஆயிரம் ரூபாய், மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு பொருந்தாது. அதன்படி, ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பெண்கள் வரை பயன் அடையக்கூடிய மூவலூர் ராமமிர்தம் திருமண உதவித் திட்டம் கைவிடப்படுகிறது.

பயனாளிகள் எதிர்பார்ப்பு

பயனாளிகள் எதிர்பார்ப்பு

அதிக பயனாளிகள் கொண்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ரூபாய் வரை பயன் அடைந்த வந்த பெண்கள், இனி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில் குறைந்தபட்சமாக 24 ஆயிரம் ரூபாயிலிருந்து, அதிக பட்சமாக 48 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பயன் பெற கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த திட்டம் பற்றி அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 தருவதன் மூலம் தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம் என்று கூறினார்.
அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்படுகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கத்தை சரியாக தரவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 4 ஆண்டு காலமாக தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படவில்லை எனவும் திட்டத்திற்காக வாங்கிய தங்கத்தை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை எனவும் மா.சுப்ரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+