கேஸையே புரட்டி போட்ட வாதம்.. செந்தில் பாலாஜியின் 8 அஸ்திரம்.. வழக்கில் மெகா ட்விஸ்ட்.. நடந்தது என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர். இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு முக்கியமான வாதங்களை வைத்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கி உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்றது இல்லை என்று நீதிபதி பரத் சக்கரவர்த்தி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

இரண்டு நீதிபதிகள் மாறி மாறி தீர்ப்பு வழங்கிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மனைவி சார்பாக வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ ஆஜராகி வாதம் வைத்தார்.
அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வைத்த வாதத்தில், கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த காரணங்கள் அவருக்கு வாசிக்கப்பட்டன, ஆனால் அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே, இரண்டு சுயேச்சை சாட்சிகள் முன்னிலையில் கைது உத்தரவு/மெமோ நிறைவேற்றப்பட்டது, என்று கூறியது.
கைது மொமோவோ, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. அதனால் இந்த ஆட்கொணர்வு மனு செல்லாது என்று வாதம் வைத்தார்.இதை எதிர்த்து என். ஆர் இளங்கோ வைத்த வாதத்தில், பின்வரும் முக்கியமான பாயிண்டுகளை கூறினார்.
1. சட்ட விரோத பணமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவே முடியாதே. சட்டத்திலேயே அதற்கு இடம் இல்லையே. பின்னர் எப்படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியும். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இதை பல முறை தெளிவுபடுத்தி உள்ளது.
2. அப்படி இருக்க இவர்கள் எதை வைத்து கஸ்டடி கேட்டனர். இந்த கைதில் சட்ட விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சுங்கத்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு சட்ட விரோத பணமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த பிரிவில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவே முடியாதே.
3. ஆகவே இது சட்ட விரோதமான கைதுதான். 41 ஏ படி கைது செய்தால் கைது செய்யப்பட்ட நபரிடமும் குடும்பத்தினரிடமும் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இவர்களுக்கு கைது செய்யவே உரிமை இல்லாத போது,. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று என். ஆர் இளங்கோ வாதம் வைத்துள்ளார்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி சக்கரவர்த்தி, CrPCயின் 41A பிரிவைப் பின்பற்றி மட்டும்தான் கைது செய்ய வேண்டுமா அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான காரணங்கள் இருப்பதாக அதிகாரி திருப்தி அடைந்தால், கைது செய்வதற்கு முன் சம்மன் அனுப்பாமல் கைது செய்யலாமா என்று கேட்டார்.
4. இதற்கு என். ஆர் இளங்கோ கூறிய பதிலில் தற்போதைய வழக்கில், கைது செய்வதற்கான முழுமையான காரணங்களை ED கூறவில்லை. கைது செய்வதற்கு முன் அமலாக்கத்துறை கண்டிப்பாக பிரிவு 41A ஐ பின்பற்ற வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி "ஆம், சரிதான்" என்றார். இதையடுத்து நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் அமைதி நிலவியது. நீதிபதிகள் தங்களுக்குள் இதையடுத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
5. நீதிமன்ற காவலில் வைக்கும் போது இதையெல்லாம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கைதுக்கான காரணங்களை தெரிவித்து தயாரிக்கப்பட்ட மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என்பது குறித்து எந்த பதிவும் இல்லை என்று கூறினார்.
6. இதற்கு அமலாக்கத்துறை வைத்த பதில் வாதத்தில், கைது குறித்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குக்கு தகவல் தெரிவித்ததாக மொபைல் ஸ்கிரீன் ஷாட் இணைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு கூறுகிறது. இதுசம்பந்தமாக காலை 8:12 மணிக்கு தான் அனுப்பப்பட்டுள்ளது.
7. கைது மொமோவோ, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை என்றது.

என். ஆர் இளங்கோ பதில்: இதற்கு என் ஆர். இளங்கோ அளித்த பதிலில், செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை ஆவணத்தில், 13 பாராக்கள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் 14வது பாரா கையால் எழுதப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டதை அமைச்சரின் சகோதரர் அசோக்கிற்கு தெரிவித்தோம் என்பதை மட்டும் கடைசியில் கையில் எழுதி உள்ளனர். இது குழப்பமாக உள்ளது.
8. இதை ஏன் அவர்கள் முன்கூட்டியே டைப் செய்யவில்லை. அமைச்சர் மெமோவை பெற மறுத்ததையோ அல்லது கையெழுத்திடுவதையோ ஏன் பதிவு செய்யவில்லை? ஜூன் 14 அன்று காலை 8:12 மணிக்கு அமைச்சரின் சகோதரர், மனைவி மற்றும் பட்டயக் கணக்காளர் ஆகியோருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது, ஆனால் அதற்கு முன் இரவே 1:41 மணிக்கு தயாரிக்கப்பட்ட கைது குறிப்பில் இந்த விஷயத்தை இவர்கள் எப்படி எழுதினர்? இது எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications