விஜய்க்கு எதிராக திரும்பும்.. டெவில் தியரி.. களத்தில் தவெகவிற்கு பெரிய செக்.. மேலே வருது அதிமுக?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க ஆரம்பிச்சுடுச்சு. ஒரு பக்கம் ஆளுங்கட்சியான தி.மு.க, இன்னொரு பக்கம் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இவங்க ரெண்டு பேருக்கும் 'டஃப் ஃபைட்' கொடுக்க விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பயங்கர ஸ்பீடா களம் இறங்கியிருக்கு. ஆனா, இந்த முறை தேர்தல் நேரத்தில்.. கள பலம், மக்கள் ஆதரவு உள்ளிட்ட விஷயங்கள்தான் கிங் மேக்கரா இருக்கப்போகுதுன்னு அரசியல் வட்டாரத்துல ஒரு டாக் ஓடுது.
அதாவது, ஆங்கிலத்துல ஒரு பழமொழி உண்டு - "Known devil is better than an unknown angel". நம்ம ஊர் மொழியில் சொல்லணும்னா, "தெரியாத சாமியை விட, தெரிஞ்ச பேய் எவ்வளவோ மேல்!" இந்த 'ஃபெமிலியர் டெவில்' (Familiar Devil) தியரியை நம்பி தான் இப்போ திராவிடக் கட்சிகள் தங்களோட வியூகத்தை அமைச்சுக்கிட்டு இருக்காங்க.

தவெக சோஷியல் மீடியாவில் ஓகே... ஆனா பூத்ல?
இப்போ வர்ற கருத்துக்கணிப்புகள் எல்லாம் தவெக -வுக்கு பெரிய லெவல்ல 'ஹைப்' கொடுக்குதுங்கிறது நிஜம் தான். ஆனா, அந்த நம்பர்ஸை அப்படியே நம்பிட முடியாது. ஏன்னா, தவெக -வைப் பொறுத்தவரை விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன்-னு ஒரு சிலரைத் தவிர மத்த எல்லா முகங்களுமே அரசியலுக்கு ரொம்பப் புதுசு.
ஒரு ஓட்டுநர் சீட்ல உட்காரும்போது, பழக்கப்பட்ட டிரைவர் கிட்ட வண்டியைக் கொடுப்போமா இல்ல இப்பதான் எல்.எல்.ஆர் (LLR) எடுத்த ஒருத்தர்கிட்ட கொடுப்போமா? வாக்காளர்களோட மைண்ட்செட்டும் இதுதான். தொகுதிக்குள்ள ஒரு பிரச்னைன்னா யார்கிட்ட போறதுன்னு தெரியாத ஒரு 'ரூக்கி' வேட்பாளரை விட, அடிமட்ட அரசியல்ல ஊறிப்போன ஒரு பழைய முகத்தையே மக்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அதிகம். கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மாவை இறங்குவீர்களா? அல்லது சையது முஷ்டாக் ஆடும் வீரரை இறங்குவீர்களா?
அ.தி.மு.க-வின் 'சைலண்ட்' அஸ்திரம்!
கருத்துக்கணிப்புகள்ல அ.தி.மு.க-வுக்கு பின்னடைவுன்னு சொன்னாலும், கள நிலவரம் வேற மாதிரி இருக்கலாம். ஏன்னா, அ.தி.மு.க-வோட பெரிய பலமே அவங்ககிட்ட இருக்கிற இரட்டை இலை சின்னம்தான். மேலே யார் இருந்தாலும்.. அந்த சின்னத்திற்கு வாக்களிக்கும் மக்கள் உண்டு. காலம் காலமா அரசியல்ல களப்பணிகளை மாஜி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்னு ஒவ்வொரு ஏரியாவுலயும் அவங்களுக்குன்னு ஒரு 'ஃபேஸ் வேல்யூ' இருக்கு.
புதுசா வர்றவங்க ஓட்டு கேட்கும்போது, "தம்பி நீங்க யாரு?"ன்னு கேக்குற நிலைமை வரும். ஆனா, அ.தி.மு.க-வோட பழைய முகங்கள் வரும்போது, மக்கள் அவங்களை ஏற்கனவே பார்த்திருப்பாங்க, பழகியிருப்பாங்க. இந்த 'பரிச்சயம்' தான் தேர்தல்ல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்னு ரத்தத்தின் ரத்தங்கள் தெம்பா இருக்காங்க.
திராவிடக் கட்சிகளின் 'வெயிட்டிங் கேம்'
தேர்தல் நெருங்க நெருங்க, தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இந்த 'அனுபவம்'ங்கிற கார்டை வச்சு தான் விளையாடப் போறாங்க. "நிர்வாகம் பண்றது சாதாரண விஷயம் இல்ல, இதுக்கு அனுபவம் வேணும்"ங்கிற பிரச்சாரத்தை முன்வைக்கப் போறாங்க.
ஆக, தவெக -வுக்கு இருக்கிற ஒரே சவால் - மக்களோட மனசுல இருக்கிற அந்த "தெரியாத சாமி"ங்கிற பயத்தைப் போக்கி, நாங்களும் தெரிஞ்ச ஆட்கள்தான்-னு புரிய வைக்கிறதுதான். பொறுத்திருந்து பார்ப்போம், 2026-ல 'புது ரத்தம்' ஜெயிக்குமா இல்ல 'பழைய முகம்' ஜெயிக்குமான்னு!
-
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர்












Click it and Unblock the Notifications