ஜெயக்குமார் கைது.. போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்..ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeStandWithJayakumar
சென்னை : கள்ள ஓட்டு போட்டதாக திமுக தொண்டரை அரை நிர்வாணபடுத்தி தாக்கிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் #WeStandWithJayakumar என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக புகார் எழுந்தது.
அப்போது அங்கு இருந்த அதிமுகவினர் திமுக தொண்டரை கடுமையாக தாக்கிய நிலையில் அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்தத் தொண்டரின் சட்டையைக் கழற்றச் சொல்லி அரை நிர்வாணம் ஆக்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

ஜெயக்குமார் கைது
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தண்டையார்பேட்டை காவல்துறையினர் கலவரம் செய்தல், ஆபாசமாகப் பேசுதல், ஆயுதத்துடன் கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று இரவு 8 மணி அளவில் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்தனர்.

மனைவி கண்ணீர்
அவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பலரும் கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை தொடர்ந்து அவரது மனைவி கண்ணீர் விட்டு அழுதார். கள்ள ஓட்டு போடுவதை தட்டிக் கேட்டது ஒரு குற்றமா , என பேசி அவர் எந்த விளக்கமும் கொடுக்காமல் தனது கணவரை அழைத்துச் சென்றதாகவும், தனக்கு மிகவும் பயமாக உள்ளது, அவரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்த வீடியோ வெளியானது.

அதிமுக கண்டனம்
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னை ராயபுரம், பட்டினபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் ட்ரெண்ட்
அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பல இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. அமைச்சர் ஜெயக்குமாரை உடன விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை விடுவிக்க கோரியும் ட்விட்டரில் #WeStandWithJayakumar என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தற்போதைய நிலையில் இந்த ஹேஸ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் 5வது இடத்தில் உள்ளது.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications