மகாராஷ்டிராவில் இந்த வருடத்திலேயே மிகப்பெரிய உச்சம்.. வேகமெடுத்த கொரோனா.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: மகாராஷ்டிராவில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்த வருடத்திலேயே இல்லாத அளவிற்கு மிக அதிக கேஸ்கள் மஹாராஷ்டிராவில் பதிவாகி உள்ளது.
இந்தியாவில் இரண்டாம் கொரோனா வைரஸ் அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளன. கடந்த வருடமே இந்தியாவில் கொரோனா உச்சம் தொட்டது. அதன்பின் வேகமாக கேஸ்கள் சரிய தொடங்கின.
இந்த நிலையில் இந்தியாவில் வேக்சின் போடப்பட்டு வரும் நிலையில் மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 11,284,311 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 158,213 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 10,935,803 பேர் குணமாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,91,004
பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,82,763 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7177 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 9,56,801 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,36,947 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12379 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,83,531 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,43,473 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4343 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில்தான் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்திலேயே இதுதான் மகாராஷ்ராவில் பதிவான அதிக கேஸ் ஆகும். அங்கு மொத்தம் 22,52,057 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 20,99,207 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 52610 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,56,917 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,40,180 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12530 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications