சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்துட்டான்யா.. வந்துட்டான்யா! கரையை கடக்கத் தொடங்கியது மாண்டஸ்! கதிகலங்கும் கடலோர பகுதிகள்!

Google Oneindia Tamil News

சென்னை : மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தரைக் காற்றின் வேகம் பலமாக வீசத் தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் கலந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக உருவாகி தற்போது மாண்டஸ் புயலாக வலுவடைந்து இருக்கிறது.

இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பாதுகாப்பு கருதி சென்னை - புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் இல்லையாம்! தடம் மாறும் மாண்டஸ்! தடுமாறப் போகும் சென்னை? கொஞ்சம் சூதானமா தான் இருக்கனும்! மாமல்லபுரம் இல்லையாம்! தடம் மாறும் மாண்டஸ்! தடுமாறப் போகும் சென்னை? கொஞ்சம் சூதானமா தான் இருக்கனும்!

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வரும் நிலையில் இன்று இரவு புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று

பலத்த காற்று

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஏற்கனவே பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தென் மாவட்டங்களிலும் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து 75 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசும் என்றும் அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசப்படும் இடமும் வானிலை மையம் கணித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்

மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமானது வரை மழையும், அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு வாய்ப்பு உள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

கரையைக் கடக்கத் தொடங்கியது

கரையைக் கடக்கத் தொடங்கியது

இந்நிலையில் மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தரைக் காற்றின் வேகம் பலமாக வீசத் தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது.

 பலத்த காற்று

பலத்த காற்று

தற்போது மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், கடற்கரைகளில் கடல் அலைகள் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

English summary
As the outer part of Cyclone Mandous has started to cross the coast, the surface wind speed has started to increase as the storm approaches the coast, the Chennai Meteorological Department said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X