• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ரதிதேவி செய்த பகீர்.. சடலத்தை நிர்வாணப்படுத்தி.. அதுவும் பெண் கொரோனா நோயாளியிடம்.. அலறிய சென்னை

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பெண் நோயாளியை மொட்டை மாடிக்கு லிப்ட் மூலம் அழைத்து சென்று கொலை செய்துள்ளார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் ஒருவர்.. கொலை செய்துவிட்டு, சடலத்தில் இருந்த டிரஸ்களை களைத்துவிட்டு, நிர்வாணப்படுத்தி உள்ளார்.. அந்த சடலத்திடம் இருந்து செல்போன், பணத்தையும் திருடி உள்ளார்.. இவ்வளவும் சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது..!

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் மௌலி.. இவர் ஒரு பேராசிரியர்... மனைவி பெயர் சுனிதா.. 41 வயதாகிறது.. இந்நிலையில் சமீபத்தில் மௌலிக்கும் சுனிதாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அதனால் 2 பேருமே சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்... அங்கு டெஸ்ட் செய்தனர். அப்போது, மௌலியை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள சொன்னார்கள் டாக்டர்கள்.. சுனிதாவை மட்டும் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தனர்..

நிம்மதி.. 25ஆவது நாளாக குறையும் கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் 100க்கு கீழ் சென்ற தினசரி பாதிப்புநிம்மதி.. 25ஆவது நாளாக குறையும் கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் 100க்கு கீழ் சென்ற தினசரி பாதிப்பு

அட்மிட்

அட்மிட்

கடந்த மாதம் 21-ம்தேதி சுனிதா அட்மிட் ஆனார்.. அந்த மருத்துவமனையின் டவர் 3-ல் 3வது மாடியில், "B" விங்கில் சுனிதாவுக்கு சிகிச்சை ஆரம்பமானது. ஆனால், மே 23-ம் தேதி முதல் சுனிதாவை காணோம்.. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் மௌலிக்கு தகவல் தெரிவித்தது... இதனால் பதறி போன அவர், மனைவியை எங்கெங்கோ தேடி பார்த்தார்.. சுனிதா கிடைக்கவே இல்லை..

சடலம்

சடலம்


இந்நிலையில் கடந்த 8-ம்தேதி ஆஸ்பத்திரியின் மொட்டைமாடியில் ஒரு பெண்ணின் சடலம் அழுகி கிடப்பதாக ஆஸ்பத்திரி வளாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இதையடுத்து, விரைந்து சென்று பார்த்ததில் அது சுனிதா என்பது தெரியவந்தது.. மனைவியின் சடலத்தை பார்த்து கதறி கதறி அழுதார் மௌலி.. சுனிதாவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு ரிப்போர்ட் வந்தது. அதில், கொலை செய்யப்பட்டு சுனிதா இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

 சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

உடம்பு சரியில்லாத நிலையில், சுனிதா எப்படி மொட்டை மாடிக்கு செல்ல முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை துவக்கினர். அந்த வளாகத்தின் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆஸ்பத்திரி ஊழியர் ரதிதேவி, சுனிதாவை அவரது வார்டிலிருந்து, லிப்ட் மூலம் மாடிக்கு அழைத்து செல்வது பதிவாகி இருந்தது.. அதனால், ரதிதேவியிடம் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான், அவர் மொத்த விஷயத்தையும் போலீசில் கக்கினார்.

ரதிதேவி

ரதிதேவி

ரதிதேவிக்கு 40 வயதாகிறது.. திருவொற்றியூரை சேர்ந்தவர்.. ஒப்பந்த அடிப்படையில் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.. அதாவது நர்ஸ்களுக்கு உதவியாக இருப்பவர்.. ஒருநாள் சுனிதா கையில் ஒரு பை இருந்துள்ளது.. அதில் ஓரளவு பணமிருந்ததை பார்த்துவிட்டார்.. அந்த பணத்தை திருட முயற்சி செய்தபோது, சுனிதாவிடம் கையும் களவுமாக ரதிதேவி சிக்கி கொண்டுவிட்டார்..

நிர்வாணம்

நிர்வாணம்

ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் செய்ய போவதாகவும் சுனிதா சொல்லவும், ரதிதேவி பயந்துவிட்டார்.. அதனால், கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும் என்று சொல்லி, சக்கர நாற்காலியில் உட்கார வைத்து, 3வது மாடியில் இருந்து 8-வது தளத்துக்கு லிப்டில் அழைத்து சென்றுள்ளார்.. அங்கு ஒரு ரூமில் வைத்து, கீழே கிடந்த ஒயர் எடுத்து, சுனிதாவின் கழுத்தையும் நெரித்து கொன்றுள்ளார்.. பிறகு, யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று, சுனிதாவின் ஆடைகளை களைத்து நிர்வாணப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தது போல் தோற்றத்தையும் உருவாக்கி உள்ளார்..

பணம்

பணம்

இவ்வளவும் சுனிதா வைத்திருந்த ரூ.9,500 பணத்துக்காக நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இப்போது ரதிதேவி விசாரணையின்பிடியில் உள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆஸ்பத்திரியான ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில், கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்... ஆனால் இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடா? அதுவும் ஒரு பெண் நோயாளியை, ஆஸ்பத்திரியிலேயே ஆஸ்பத்திரி ஊழியரால் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
The Professors wife who was admitted for Covid 19 treatment murdered in Chennai G.H
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X