வெல்லம் உருகுதய்யா முருகா விடியல் ஆட்சியிலே.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் வீடியோ
சென்னை : தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் உள்ளம் உருகுதய்யா பாடல் வரிகளை ரீமிக்ஸ் செய்து வெல்லம் உருகுதையா முருகா விடியல் ஆட்சியிலே என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
கடந்த வாரம் இந்த திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தொடங்கி வைத்த நிலையில் அரிசி நெய் ஏலக்காய் வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் மளிகை பொருட்கள் ஆகியவை பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தரமில்லை என புகார்
இந்த நிலையில் பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்று இருப்பதாக அதிமுக தொடர்ந்து புகார் கூறி வருகிறது இது குறித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிபழனிசாமி தொடர்ந்து ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறார். இதே போல அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் இவ்விவகாரம் தொடர்பாக புகார் கூறி வந்தார்.

முதல்வர் உத்தரவு
இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு தரமாக வழங்குவதை அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுக அமைச்சர்கள் , அதிகாரிகள் நியாய விலைக் கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் குறித்து திடீர் ஆய்வு நடத்தி வருகிறார்.

வெல்லம் புளி
இருந்தபோதும் வெல்லம் உருகி இருப்பதாகவும் புளியில் பல்லி இருந்ததாகவும் சமூக வலைதளங்களை புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாக இருப்பதாக கூறி புகழ்பெற்ற உள்ளம் உருகுதையா என்ற பாடலை வெல்லம் உருகுதையா முருகா விடியல் ஆட்சியிலே என கலாய்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வேகமாக பரவி வருகிறது.

வெல்லம் உருகுதய்யா விடியல் ஆட்சியிலே
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பழைய முருகன் பாடல் வீடியோவை எடுத்துக் கொண்டு வரிகளை மட்டும் மாற்றி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் வெள்ளம் உருகுதையா முருகா விடியல் ஆட்சியிலே பல்லி புதைத்திடவே அவர்க்கு புளிதான் கிடைத்ததப்பா எனவும் கலாய்த்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications