சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எல்லோரும் சமம்தானே டீச்சர்.." அட, இப்படி பேசியது தலையில் தாறுமாறாக கட்டிங் செய்த இந்த மாணவன்தானா?

Google Oneindia Tamil News

சென்னை : சாதி ரீதியாக பேசியது தனது ஆசிரியராகவே இருந்தாலும் எல்லோரும் சமம் தானே டீச்சர் என்று தைரியமாக பேசி அவருக்கே பாடம் எடுத்த மாணவனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தென் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது மாணவனுடன் சாதி ரீதியாக பேசும் ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த ஆசிரியை மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3 நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3

அந்த ஆடியோவில், " உன் பேர் என்ன" என்ற துணைத் தலைமை ஆசிரியர் கேட்க, மாணவன் தனது பெயரைக் குறிப்பிடுகிறார். அடுத்த கேள்வியாக அந்த மாணவனின் சமூகத்தைக் குறிப்பிட்டு மாணவனிடம் உறுதி படுத்திக்கொண்டார்.

சாதிய ஆசிரியை

சாதிய ஆசிரியை

அதன் பிறகு அந்த மாணவனிடம், "நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும் செய்வியா" என கேட்கும்போது, "என்ன டீச்சர் சொல்லுங்க.." என்கிறார் மாணவர். அதன்பிறகு, பள்ளியில் உள்ள வேற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களின் பெயரை குறிப்பிட்டு, "அவர்களை உங்களுக்கு பிடிக்குமா" என கேட்கிறார்.

அதிர்ச்ச்சி ஆடியோ

அதிர்ச்ச்சி ஆடியோ

அதற்கு மாணவன், "எல்லாத்தையும் பிடிக்கும்" என்கிறார். மாணவனின் பதிலைக் கேட்டு ஒரு சில நொடிகள் யோசிக்கும் ஆசிரியை, "எல்லாத்தையும் பிடிக்கும்னு சொல்லும் நீ, எப்படி எனக்கு உதவி செய்ய முடியும். அந்த ஆசிரியர்களை உங்க அப்பாவுக்கு பிடிக்குமா" என்று தொடர்ந்து பேசிவிட்டு, குறிப்பிட்ட அந்த ஆசிரியர்கள், "உங்க ஊர் பயங்கள சேர்க்கக் கூடாதுனு, அவங்க சொல்லுவாங்க அதான் கேட்டேன்" என்கிறார்.

எல்லோரும் சமம் தானே டீச்சர்

எல்லோரும் சமம் தானே டீச்சர்

பிறகு அந்த ஆசிரியை தனது சமூக அடையாளத்தையும், பேசும் மாணவனின் சமூகத்தையும் குறிப்பிட்டுவிட்டு, அந்த இரண்டு ஆசிரியர்களின் சமூகம் என்னவென்று மாணவனிடம் கேட்க, அவர் ஆசிரியர்களின் சமூகத்தைக் குறித்து தெரிவிக்கிறார். அதன் பிறகு மாணவன், "எல்லோரும் சமம் தானே டீச்சர்" எனப் பேசினார் இந்த ஆடியோ அப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாராட்டுகள் குவிந்தது

பாராட்டுகள் குவிந்தது


ஆசிரியராக இருந்தாலும் சற்றும் யோசிக்காமல் பேசிய மாணவருக்கு பாராட்டுகள் குவிந்தது. அரசியல் கட்சி தலைவர்கலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி அந்த மாணவனை பாராட்டி தள்ளினர். ஆனால் அவர் யார் எப்படி இருப்பார் என்பது மட்டும் தெரியவில்லை, அதே நேரத்தில் புளியங்குளம் என அந்த ஆசிரியை பேசியதை வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் என தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Recommended Video

    Thoothukudi Teacher-ன் சாதிய பேச்சு! Student-ன் Reply என்ன தெரியுமா? | *Viral
    யார் அந்த மாணவன்

    யார் அந்த மாணவன்

    இந்நிலையில் தான் அந்த மாணவர் யார் என்பது தெரிய வந்திருக்கிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது மாணவர்களின் தோற்றம் குறித்து ஆசிரியர் ஒரு விமர்சிக்க திடீரென ஒரு மாணவனை எழுப்பிய நிகழ்ச்சி தொகுப்பாளர் இவர் யார் தெரியுமா? என கேட்க தம்பி நீங்க என்ன சொன்னீங்க என கேட்டார். எல்லோரும் சமம் தான் டீச்சர் என தான் பேசியதை கூறினார். இதையடுத்து ஆசிரியருக்கே பாடம் எடுத்த மாணவர் இவர்தான் என தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வீடியோவை சமூக வலைதளவாசிகள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    A video of a student who took a lesson from him and boldly said that 'everyone is the same teacher’ even though it was his teacher who spoke caste-wise is now spreading rapidly on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X