ஓபிஎஸ், எடப்பாடி பின்னாடி அதிமுககாரர்கள் கைகோர்த்த காரணம் தெரியுமா? டிடிவி தினகரன் ஓபன் டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உடன் அதிகாரம் மற்றும் பணத்தை நம்பி மட்டும் தான் சிலர் இருந்தனர் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் பெரும்பான்மையான முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர்.

ஓபிஎஸ் -ஈபிஎஸ் சண்டையால்

ஓபிஎஸ் -ஈபிஎஸ் சண்டையால்

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை வரும் 6 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. அதிமுகவினர் உச்ச நீதிமன்றம் என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்று உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதற்கு இடையே, ஓபிஎஸ் -ஈபிஎஸ் சண்டையால் அதிமுக பலம் இழந்துவிட்டதாக கடுமையாக டிடிவி தினகரன் ஒருபக்கம் விமர்சித்து வருகிறார்.

அதிமுகவை அழித்து வருவதாக

அதிமுகவை அழித்து வருவதாக

ஓ பன்னீர் செல்வம் மனம் திருந்திவிட்டார் என்று கூறி அவரை அவ்வளவாக கடுமையாக விமர்சிக்காத டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி வருகிறார். குறிப்பாக சுயநலத்துடன் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழித்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருவதை பார்க்க முடிகிறது. ஓ பன்னீர் செல்வம் மீது அவ்வளவு கடுமை காட்டாத டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி தரப்பினரை கடுமையாக சாடி வருகிறார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்சே காரணம்

ஓபிஎஸ் - ஈபிஎஸ்சே காரணம்

அதுவும் அதிமுக அமைக்கும் மெகா கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு இடம் இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு அறிவித்த பிறகு .. இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான வார்த்தைப் போர் மேலும் முற்றியுள்ளது. இந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், அதிமுக செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ்சே காரணம் என்று என்று விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ்- ஈபிஎஸ் பிரச்சினை

ஓபிஎஸ்- ஈபிஎஸ் பிரச்சினை

மதுரையில் நடைபெற்ற திருமணவிழாவில் கலந்து கொண்ட செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது:- நீதிமன்றத்தால் அதிமுக செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமியே காரணம். ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் உடன் அதிகாரம் மற்றும் பணத்தை நம்பி மட்டும் தான் அவர்களுடன் சிலர் இருந்தனர். உண்மையான தொண்டர்கள் எங்களுடன் தான் உள்ளனர். தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பதை ஓபிஎஸ்- ஈபிஎஸ் பிரச்சினை புரிய வைத்துவிட்டது" என்றார்.

பாடம் புகட்டுவார்கள்

பாடம் புகட்டுவார்கள்

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று பேசிய டிடிவி தினகரன் கூறியதவது:- தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் திராவிட மாடல் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டப்படும். என்னதான் கூட்டணி பலம் இருந்தாலும் தமிழக மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவர்கள். திமுக என்றாலே ஊழல்தான். போடாத சாலைகளுக்கு கூட திமுகவினர் பணம் பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+