சீட்டே கேட்காதவருக்கு சீட்டா? அதிமுகவில் நிலவும் அதிருப்தி! பஞ்சாயத்தை சமாளிக்கும் தலைமை!
சென்னை: ராஜ்யசபா சீட்டே கேட்காத ஒருவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம் என அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர்.
கட்சிக்காக உழைத்ததில் தாங்கள் எந்த வகையில் குறைந்துவிட்டோம் என்கிற வகையில் சீட் கிடைக்காதவர்களின் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இவர்களை சமாதானப்படுத்தும் பணிகளில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஈடுபட்டு வருகிறார்.

ராஜ்யசபா சீட்
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் திமுக 4 இடங்களும், அதிமுக 2 இடங்களும் கைப்பற்றக் கூடும். திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்க்கு ஒரு இடத்தை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 3 இடங்களுக்கு கடந்த வாரமே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

கடிதம் தரவில்லை
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கூட தொடங்கிவிட்ட நிலையில் அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் நேற்றிரவு தான் வெளியிடப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தருமர் ஆகிய இருவரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தருமர் ராஜ்யசபா சீட் வேண்டும் என எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை. யாரை சந்தித்தும் கேட்கவில்லை. ஆனால் அவரை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக தலைமை.

சீட் கேட்காதவர்
இது ராஜ்யசபா சீட்டுக்காக தேனிக்கும், சென்னைக்கும், சேலத்திற்கும் அலைந்து திரிந்தவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீட்டே கேட்காதவருக்கு சீட்டா? என தங்களின் ஆதங்கக் குரல்களை தலைமையை நோக்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே இவர்களை சமாதானப்படுத்தும் பணிகளில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஈடுபட்டு வருகிறார்.

வீண் வம்பு
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வாரிசுகள் பலர் ராஜ்யசபா எம்.பி.யாகும் கனவில் இருந்தனர். இவர்களில் ஒருவருக்கு கொடுத்து இன்னொருவருக்கு கொடுக்காமல் விட்டால் வீண் வம்பு வரும் எனக் கருதியே பெரியளவில் அறிமுகமில்லாத ஒன்றியச் செயலாளர் ஒருவரை ராஜ்யசபா வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்திருக்கிறதாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக











Click it and Unblock the Notifications