எங்க இருந்துயா வர்றீங்க! நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் கூட்டம்! யார் இந்த டிடிஎஃப் வாசன்! பின்னணி?
சென்னை : யாருயா நீ? இவ்வளவு நாளா எங்க இருந்த? என்று கேட்கும் அளவுக்கு யூடியூபில் மிகப் பிரபலமான டிடிஎஃப் வாசன் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடிகர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் கூட்டம் கூடுவதன் பின்னணி என்ன..?
Recommended Video
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகமாக வருகிறது குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ நெட்வொர்க் மூலம் இணையத்தை இலவசம் என அறிவிக்க youtube. பேஸ்புக் லைவ் என பல நாட்களாக தூங்கிக் கொண்டிருந்த சிங்கங்கள் வீறு கொண்டு எழுந்தது.
யூடியூபில் தனித்தனியாக சேனல்கள் ஆரம்பித்து தற்போது பலரும் கலக்கி வருகின்றனர். அதற்கு முன்னர் யூடியூப் சேனல்கள் என்பது தொலைக்காட்சி சேனல்களை விட அதிக மதிப்பு வாய்ந்ததாக இருந்தது. ஆனால் தற்போது செல்போன்கள், அளவில்லா இன்டர்நெட் வசதிகள் மூலம் உலகமே கைக்குள் வந்துவிட்டது போல அனைவரும் ஆளுக்கு ஒரு யூடியூப் சேனல்களை ஆரம்பித்துள்ளனர்.

யூட்யூப் சேனல்
சமையல், நடனம் ,டிராவல் என தங்களுக்கு பிடித்த துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த நபர்களை பின்னுக்கு தள்ளி கடைக்கோடி நபர் கூட இன்று இணையங்களை மிகப் பிரபலமாகி வருகின்றனர்
அந்த வகையில் யூடியூப் சேனல் மூலம் பிரபல டிராவல் விலாக்கர் ஆக இருப்பவர் டிடிஎஃப் வாசன். கோவையை பூர்வீகமாகக் கொண்ட வாசன் கடந்த 2020 ஆம் ஆண்டு Twin Throttlers youtube சேனலை ஆரம்பித்தபோது வெறும் நூற்றுக்கணக்கில் தான் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இருந்தது. அடுத்தடுத்து சில மாதங்களிலேயே அவரது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தையும் தாண்டி உள்ளது.

டிடிஎஃப் வாசன்
தற்போதைய சூழலில் இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட ட்ராவல் விலாக்கர் என்றால் அது டிடிஎஃப் வாசன் தான் கோவையில் இருந்து லடாக் வரை சென்ற அவரது வீடியோ இலட்சக்கணக்கான இளைஞர்களால் லைக் செய்யப்பட்டது. ஒல்லியான தேகம் தோள்பட்டை வரை நீண்டிருக்கும் முடி என சற்று வித்தியாசமாக இருந்தாலும் அசுரவேகம் அசாத்திய திறமைகள் என பைக்கில் இவர் காட்டிய சாகசங்களை கண்டு 2k கிட்ஸ் இளைஞர்கள் கிறங்கிப் போயினர். மேலும் வழிநெடுக பயணம் செய்யும்போது ஆங்காங்கே சிறுவர்களையும் வயதானவர்களையும் சந்தித்து பணம், பரிசு கொடுப்பது என சென்டிமென்ட் சேட்டைகளை செய்து வந்த இவருக்கு சப்ஸ்கிரைப்ர்களின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தியது.

மிகவும் பிரபலம்
ஆனால் இவரை தற்போதுள்ள பெரும்பாலான 90's கிட்ஸ்களுக்கு இவர்களைப் பற்றி தெரியாது. டிவிஎஸ் 50 வண்டியவே 20 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டும் அவர்களுக்கு டிடிஎஃப் வாசனை எப்படி பிடிக்கும். இந்த நிலையில்தான் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய டிடிஎஃப் வாசனை காண ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர் அவரது ரசிகர்கள். அவரைப் பார்க்கவும் அவர் பேசுவதை கேட்கவும் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து சமூக வலைதளவாசிகள் மலைத்து போயினர். மிகப் பிரபலமான நடிகர்களுக்கு இணையாக வந்த கூட்டம் தான் தற்போது சமூக வலைதளவாசிகள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது.

ஆயிரக்கணக்கில் ரசிகர்கள்
முதன் முதலில் தனது தந்தையின் பழைய என்பில்டு வாகனத்தை வைத்து பயணத்தை தொடங்கிய இவரிடம் தற்போது ஏராளமான சூப்பர் பைக்குகள் உள்ளன. அதை வைத்து இந்தியா முழுவதும் சுற்றி வரும் இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் ரசிகர்களையும் சேர்த்து. அதன் எதிரொலி தான் தனது பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்திருந்த வாசன் இதற்காக 30 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்த்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய, ஆனால் அங்கோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். கோவையில் உள்ள தனது வீட்டில் ஒன்றரை கிலோ கேக்குடன் காத்திருந்த அவருக்கு பிரம்மாண்ட கேக்குகளுடன் அணிவகுத்தனர் ரசிகர்கள்.

பிரம்மாண்ட கூட்டம்
இதனால் அந்த இடமே திருவிழா கூட்டம் போல காட்சியளித்தது நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசாரே திணறிப் போயினர். இதனை அடுத்து மேலும் கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு ரசிகர்களை கட்டுப்படுத்தியதோடு இது போன்ற நிகழ்ச்சிகளை முன்னறிவிப்பின்றி ஏற்பாடு செய்யக்கூடாது என வாசனை எச்சரித்து சென்றனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications