• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வயசு பெண்களிடம் அத்துமீறிய போலீஸார்.. தண்டனைக்குள்ளாகாமல் தப்பும் விபரீதம்.. தீர்வுதான் என்ன?

|

சென்னை: வயசு பெண்களுக்கு அத்துமீறி, கதற கதற செக்ஸ் டார்ச்சர்கள் தந்துள்ளனர் சில போலீஸ்காரர்கள்.. இவர்களை கையும் களவுமாக பிடித்து கொண்டு போய் ஸ்டேஷனில் ஒப்படைத்தால், எந்தவித குற்ற உணர்ச்சியும், உறுத்தலுமின்றி ஹாயாக வெளியே வந்துவிடுகிறார்கள் என்றால், இந்த சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? என்ற கேள்வி பரவலாக எழுகிறது.

சென்னை, வடபழனி.. இரவு நேரம்.. நல்ல மழை.. ஆபீசில் வேலை முடிந்து வந்த ஒரு பெண், வீட்டுக்கு போவதற்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார்.

ரொம்ப நேரமாக அவருக்கு பஸ் கிடைக்கவில்லை.. ரோட்டிலும் ஆட்கள் அவ்வளவாக இல்லை.. அப்போது திடீரென ஒரு பைக் வந்து அந்த பெண்ணிடம் நின்றது.. அதில் வந்தவர் செம போதையில் இருந்திருக்கிறார்.

வேலூர் அரசு ஆஸ்பத்திரியின் பிரசவ வார்டில் பெண் வேஷம் போட்டு வந்த ஆண்.. தர்ம அடி.. பகீர் காரணம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியின் பிரசவ வார்டில் பெண் வேஷம் போட்டு வந்த ஆண்.. தர்ம அடி.. பகீர் காரணம்

 அநாகரீகம்

அநாகரீகம்

"நான் டிராப் செய்கிறேன்" என்று சொல்லவும், அந்த பெண் வண்டியில் ஏற மறுத்துள்ளார்.. பிறகு கட்டாயப்படுத்தி, அந்த பெண்ணை பைக்கில் ஏற்ற முயன்றுள்ளார் அந்த நபர்.. இப்போதுதான் அதிர்ந்து போனார் இளம் பெண்.. பைக்கில் ஏறவே முடியாது என்று பெண் பிடிவாதம் பிடிக்கவும், தன் சேட்டையை காட்ட ஆரம்பித்துள்ளார் போதை நபர். பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென அநாகரீகமாக நடந்து கொள்வதை கண்ட அந்த பெண், கத்தி கூச்சல் போட்டார்.. அப்போதுதான் ஆங்காங்கே நடமாடி கொண்டிருந்த பொதுமக்களும், பெண்களும் திரண்டு வந்தனர்.. அருகில் வந்து பார்த்தபோதுதான் அந்த நபரை கண்டு விக்கித்து நின்றனர்.. காரணம், அவர் ஒரு போலீஸ்காரர்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

யூனிபார்மை பார்த்ததுமே ஆவேசமானார்கள்.. டியூட்டியில் இருந்து கொண்டு இப்படி ஒரு காரியத்தை செய்வதா என்று நைய புடைத்தனர்.. வடபழனி ஸ்டேஷனுக்கும் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அதற்குள் போலீஸ்காரரை தாக்கும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை தந்தது.. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பெயர் ராஜு.. எம்ஜிஆர் நகர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர்.. இறுதியில் ராஜூ சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனாலும் ராஜு விடவில்லை.. தன்னை யாரெல்லாம் தாக்கினார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு புகார் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து, 5 பேரை கைது செய்தனர்.

 இரண்டாவது சம்பவம்:

இரண்டாவது சம்பவம்:

அதுபோலவே தென்காசியில் ஒரு சம்பவம் நடந்தது.. சில்லிகுளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.. இவர் போலீஸ்காரர்.. ஊசி பாசி மணி விற்கும் ஒரு நாடோடி பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.. அதுவும் பட்டப்பகலிலேயே.. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டனர்.. இந்த வீடியோவும் வைரலானது.. ஆனால், யாருமே இந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை... மதுரை ஹைகோர்ட் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிக்கவும், போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், அந்த போலீஸ்காரரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர் தென்காசி போலீஸார்!

 மூன்றாவது சம்பவம்:

மூன்றாவது சம்பவம்:

இதுபோலவே இன்னொரு சம்பவம் சென்னையிலேயே நடந்தது.. ஒரு இளம்பெண் தன்னுடைய அப்பாவுடன் பீச்சுக்குசென்றார்.. அப்பா பாப்கார்ன் வாங்கி வர சென்றார்.. அந்த நேரம் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் ஒரு இளைஞர் செக்ஸ் டார்ச்சர் தந்திருக்கிறார்.. திரும்பி வந்த அப்பாவிடம் மகள் நடந்ததை சொல்லவும், அந்த இளைஞரிடம் நியாயம் கேட்டார். உடனே போதையில் இருந்த இளைஞர், அந்த அப்பாவை அடித்துவிட்டார்.. இதைபார்த்து கொந்தளித்த பொதுமக்கள் திரண்டு வந்து இளைஞரை சரமாரியாக தாக்கி மெரினா ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.. அப்போதுதான் தெரிந்த அந்த இளைஞரும் ஒருபோலீஸ்காரராம்.. பெயர் பாபு.. இப்போது விசாரணை நடந்து வருகிறது.

வியப்பு

வியப்பு

இப்போது பொதுப்படையாக ஒரு கேள்வி எழுகிறது.. நடந்த இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எல்லாரும் காவல்துறையை சேர்ந்தவர்களே.. பிரதான குற்றவாளிகளும் இவர்களே.. பொதுமக்களால் நேரடியாக கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே.. சாட்சிகளோ ஏராளம்... பாதிக்கப்பட்டவர்களோ இளம் பெண்கள்.. ஆனாலும் அத்தனை பேரும் வெகு எளிதாக சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

 அராஜகம்?

அராஜகம்?

அப்படி என்றால் இதில் இருந்து நாம் என்ன புரிந்து கொள்வது? தவறிழைத்தவர்கள் என்று உறுதியான பின்பும் அவர்களுக்கு தண்டனை கிடைக்காதா? பெண்களை பாதுகாக்க வேண்டிய சில போலீசாரே இந்த அராஜகம் செய்தால், வெகுஜன மக்கள் எங்கு போய் நிற்பது? யாரிடம் முறையிடுவது? நம்முடைய பலாத்கார, பாலியல் சட்டங்கள் கடுமையாக இல்லையா? பாலியல் நோக்கத்துடன் ஒரு பெண்ணுக்கு உடல்ரீதியாகத் துன்புறுத்துவது, தாக்குவது போன்ற குற்றங்களுக்கு ஒன்று முதல் 5 வருடங்கள் சிறை தண்டனை இருக்கிறதே.. இது காவல்துறைக்கு பொருந்தாதா? இதற்கு யார் பதில் தருவது?

English summary
Three incidents about TN police misbehaving with Young woman in public
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X