கடைசியில் தெரிந்த உண்மை.. நின்று போன கல்யாணம்.. பிரியாணி அபிராமியின் தம்பி எடுத்த விபரீத முடிவு
சென்னை: குன்றத்தூரில் வாழ்ந்த டிக்டாக் புகழ் அபிராமியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இன்னும் சொல்வது என்றால் பிரியாணி அபிராமி. இவர் கள்ளக்காதலுக்காக தன் குழந்தைகளை கொன்றார். இந்நிலையில் இந்த விவகாரம் வெளியே தெரிந்த காரணத்தால் திருமணம் நின்றதால் டிக்டாக் புகழ் அபிராமியின் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர். அபிராமி ர் டிக்டாக் ஆப்பில் மிகவும் பிரபலம் ஆனவர்.
அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்துள்ளார்கள். இருப்பினும் கள்ளக்காதல் கண்ணை மறைத்த காரணத்தால், பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொடூரமான முறையில் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக அபிராமி மீது புகார் எழுந்தது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கடந்த 2018ம் ஆணடு செப்டம்பர் மாதம் அபிராமியை கைது செய்தனர்.

அபிராமி குடும்பம்
கள்ளக்காதல் மற்றும் பிரியாணிக்காக பெற்ற குழந்தைகளை அபிராமி கொன்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே அபிராமியின் தம்பி பிரசன்னா மணிகண்டன் (28), மாங்காடு அடுத்த பெரிய பணிச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இளம் பெண்ணை காதலித்தார்
இவர், பெரம்பூரில் வசித்து வந்த வேலூரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த இருதரப்பு பெற்றோரும், இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

தற்கொலை
இந்நிலையில், அபிராமி விவகாரம் இளம்பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனால் திருமண ஏற்பாடுகளை நிறுத்தினார்கள் அந்த இளம்பெண்ணும் பிரசன்னாவின் தொடர்பை துண்டித்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசன்னா, நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரியாணி அபிராமி வழக்கு
இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதனிடையே செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரம் மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அடுத்த மாதம் அபிராமியின் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதில், அவருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

கள்ளக்காதல்
அபிராமி செய்த செயல் அவரது தம்பியையும்,அவரது குடும்பத்தையும் மோசமாக பாதித்து இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகள் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். ஆனால் அதை சரியாக கையாள தெரியாமல் குழந்தைகளை கொன்று, முட்டாள்தனமாகவும், கொடூரமாகவும் மாறி அபிராமியின் கண்ணை மறைத்தது கள்ளக்காதல் மட்டுமல்ல பிரியாணியும் தான். அவரது செயல் தற்போது அவரது தம்பியின் வாழ்க்கையையும் அழித்துவிட்டது.












Click it and Unblock the Notifications