விவேக், கி.ரா, துளசி ஐயா வாண்டையார் உள்ளிட்ட 13 பேருக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம் உள்ளிட்ட 13 பேருக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
சென்னை: ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டசபையில் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டசபை இன்று கூடியதும்
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம் உள்ளிட்ட 13 பேருக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறி சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 16வது சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.
இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2 வது நாளான இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது . கூட்டம் தொடங்கியதும் மறைந்த நடிகர் விவேக்கிற்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தன் நடிப்பாற்றலால் நகைச்சுவை மட்டுமல்லாது விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர், அவரின் இழப்பு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம். காளியண்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதே போல் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம், கோவை மேற்கு செ.அரங்கநாயகம், திருவொற்றியூர் விஜயன், செய்யூர் ராஜு, பர்கூர் ராஜேந்திரன், செஞ்சி சகாதேவன், மேட்டுப்பாளையம் சுலோச்சனா, பேரூர் கே.பி. ராஜு, மன்னார்குடி ராமச்சந்திரன், பழனி அன்பழகன், திருநாவலூர் ஜெ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறி சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
எம்.எல்.ஏக்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக சபாநாயர் அப்பாவு அறிவித்தார்.
ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இறுதி நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் உரையாற்றுவார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications