எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்களுக்கு ஒரு நாள் தடை! கருணாநிதிக்கு இடம் தராதவர்கள் நீங்க.. அப்பாவு குட்டு
சென்னை: சட்டசபை நிகழ்வில் இன்று பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு.
முதலில் 2 நாட்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு தடை விதித்த நிலையில் அவை முன்னவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் கோரிக்கையை ஏற்று தடையை ஒரு நாளாக குறைக்கப்பட்டது.
சட்டசபையில் இந்த இடத்தில் இன்னாரை அமரவைக்க வேண்டும், அமர வைக்ககூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என சபாநாயகர் அப்பாவு மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கூச்சல் குழப்பம்
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் 2வது நாள் கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் கடும் அமளி துமளிக்கு மத்தியில் தொடங்கியது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் பெடும் பிரளயத்தையே உண்டு பண்ணிவிட்டனர். ஆனால் எதற்கும் அஞ்சாத சபாநாயகர் அப்பாவு, இருந்தால் இருங்கள் இல்லையென்றால் வெளியேறி விடுங்கள் என அதிமுக உறுப்பினர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

அவையின் மையப்பகுதி
ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கு அதிமுக உறுப்பினர்கள் வந்ததால் அவர்களை சபை காவலர்களை கொண்டு வெளியேற்ற உத்தரவிட்டார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்த பிறகு சபாநாயகர் சில விளக்கங்களை கொடுத்தார். அதில் இந்த இடம் சவுகரியமாக உள்ளது அதை எனக்கு கொடுங்கள் என்று உறுப்பினர்கள் கேட்கலாமே தவிர இவரை இந்த இடத்தில் அமர வைக்கக் கூடாது என தன்னிடம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றார். முந்தைய காலத்தில் திமுகவின் சக்கரபாணி அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களுக்கு சக்கரநாற்காலியில் வந்து செல்ல இட வசதி செய்து தர அனுமதி கேட்டார். ஆனால் அவர் இருந்த இடமே போதும் என்று அப்போது ஆட்சியாளர்கள் கூறினர். எந்த அளவுக்கு அவர்கள் மனசாட்சி இல்லாமல் நடந்தார்கள் என்பது வரலாறு.

ஒரு நாள் தடை
சபையை முழு ஜனநாயகத்தோடு நடத்தி வருவதாக கூறிய சபாநாயகர் அப்பாவு, கடந்த காலங்களை போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என எந்த முடிவையும் தாம் எடுக்க மாட்டேன் எனவும் கூறினார். இதனிடையே சட்டசபையின் மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்வில் 2 நாட்கள் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவை முன்னவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் கோரிக்கையை ஏற்று 2 நாள் தடையை ஒரு நாளாக குறைத்தார்.

சபாநாயகர் விளக்கம்
அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டது, பேரவைக்கு வர தடை விதித்திருப்பது ஏன் என்பது பற்றியெல்லாம் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் நீண்ட விளக்கத்தை கொடுத்தார் சபாநாயகர் அப்பாவு. இன்றே இப்படியென்றால் நாளை இன்னும் என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications