அன்னைக்கு அவ்ளோ சொன்னாரே அன்பில் மகேஷ்.. நாளை நடக்குமா? பயங்கர எதிர்பார்ப்பில் டெல்டா
டெல்டா விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை: வாழை விவசாயத்தை காக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் வாழைப் பழத்தை சேர்க்க வேண்டும் என்று டெல்டா வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்னனர்.
2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்றைய தினம் பட்ஜெட் தொடங்கி உள்ளது..
சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்புகள் கூடி உள்ளது..

திமுக
தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்துள்ளது... இந்த பட்ஜெட்டை நாளைய தினம் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

வேளாண் துறை
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், டெல்டா விவசாயிகள் தனி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.. குறிப்பாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், மதிய உணவு திட்டத்தில் வாழைப் பழத்தை சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்னனர்... இத்துடன் மேலும் சில கோரிக்கைகளையும் விவசாயிகள் விடுத்துள்ளனர்.. அவைகள் இதுதான்:

நீர் ஆதாரங்கள்
நீர்நிலை பாதுகாப்புக்கு இந்த வரும் பட்ஜெட்டில் அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்.. நீர் ஆதாரங்களை மீட்டெடுக்க வேண்டும்.. மத்திய, மாநில அரசுகள் வேளாண் பண்ணைகளில் விளைபொருட்களுக்கு ஆகும் உற்பத்தி செலவுகளை கணக்கிட்டு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட வேளாண் குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இதேபோல, 3 ஊராட்சிகளுக்கு ஒரு நெல்முதல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
Recommended Video

அமைச்சர்
கடந்த 2 மாதத்துக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், வாழ்வாதாரம் செழிக்கும் வகையில், வாழை விவசாயத்தை அழிவு பாதையில் இருந்து மீட்டெடுக்கவும், அவர்களின் வாழ்வாதாரம் உயரவும், மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பேன் என்று உறுதி தந்திருந்தார். அந்த வகையில், திருச்சி விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படும் என்றே தெரிகிறது.

எதிர்பார்ப்பு
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.. அவைகளில் பெரும்பாலும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாலும், இந்த ஆண்டு விவசாயத்திற்கு என்றே தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாலும் பெருமளவு விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றே நம்பப்படுகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications