Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்குனி உத்திரம் பவுர்ணமி... நல்ல நேரத்தில் பட்ஜெட் உரையை வாசித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பங்குனி உத்திர தினமான இன்று பவுர்ணமி நாளில் நல்ல நேரத்தில் பட்ஜெட் உரையை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை பவுர்ணமி பங்குனி உத்திரம் நாளில் நல்ல நேரத்தில் தாக்கல் தாக்கல் செய்துள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

2022-23ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை வாசித்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்.
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும் என்பது இத் திருக்குறளின் விளக்கமாகும்.

திருக்குறள்

திருக்குறள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார். பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன் என்பது இதன் பொருளாகும்.

பாராட்டுகள் இல்லாத பட்ஜெட் உரை

பாராட்டுகள் இல்லாத பட்ஜெட் உரை

வழக்கமாக, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதித் துறை அமைச்சர், தனது முதலமைச்சரை திருப்திப்படுத்தும் நோக்கில், மணிக்கொரு முறை மாண்புமிகு முதலமைச்சர் தலைமையின் கீழ் அல்லது மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கிணங்க என்ற வாசகத்தை பயன்படுத்தி பட்ஜெட் உரை ஆற்றுவார். இது, கடந்த அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் நடைபெற்றது. இதை யாராலும் மறுக்க முடியாது.

ஸ்டாலின் உத்தரவு

ஸ்டாலின் உத்தரவு

ஆனால், நிதித் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து ஆற்றிய பட்ஜெட் உரையின் இடையே புகழ்ச்சி உரை எதையும் கூறவில்லை. கடந்த ஆண்டே சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசுவதை நிறுத்தும்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதன் காரணமாகவே, இன்றைய பட்ஜெட் உரையில், நிதித் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழாமல் பட்ஜெட் உரை ஆற்றியதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

 முதல்வருக்கு நன்றி

முதல்வருக்கு நன்றி

அதற்கு பதிலாக கடைசியில் பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பாக மிக முக்கியமான திருக்குறளை கூறி நிறைவு செய்தார்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

மனஉறுதி, ஈகை, அறிவுடமை, ஊக்கமுடமை ஆகிய நான்கு குணங்களுக்கு அரசருக்கு உரிய குணங்களாகும். இந்த குறளுக்கு இலக்கணமாகத்திகழும் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி பட்ஜெட் உரையை முடித்தார்.

 ராகுகாலத்தில் முடித்த பிடிஆர்

ராகுகாலத்தில் முடித்த பிடிஆர்

இன்றைய தினம் பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் வாசித்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன். வெள்ளிக்கிழமை பொதுவாக காலை 9 மணி முதல் 10.30 மணிவரை நல்ல நேரமாகும். 10.30 மணிக்கு மேல் ராகுகாலம் ஆரம்பித்து விடும் 12 மணி வரை ராகுகாலமாகும். பிடிஆர் பழனிவேல் ராஜன் தனது பட்ஜெட் உரையை நல்ல நேரத்தில் ஆரம்பித்து ராகுகாலத்தில் முடித்தார்.

என்னதான் நல்ல நேரம் பார்த்து பட்ஜெட் உரை வாசித்தாலும் பெண்கள் எதிர்பார்த்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 என்ற அறிவிப்பு இல்லாமல் போனது ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+