சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ்... பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!!

Google Oneindia Tamil News

சென்னை: தொல்லியல் துறை சாா்பில் நடத்தப்படும் பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. எனவே, தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார்.

மத்திய தொல்லியல் துறையின் கீழ் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கல்லூரி நிா்வாகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN CM Eps wrote letter to PM Modi to include Tamil language in Archaeology PG exams

அந்த அறிவிப்பில், ''எழுத்து மற்றும் வாய்வழித் தோ்வின் அடிப்படையில் 15 பேர் தோ்வு செய்யப்படுவாா்கள். சோ்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் சமஸ்கிருதம், பாலி, பிரகிருதம் போன்ற செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அதில் ''செம்மொழி'' அந்தஸ்து பெற்று இருக்கும் தமிழ் மொழி இடம் பெறவில்லை.

சமூகநீதியின் தூண் சாய்ந்துவிட்டது... ஒடுக்கப்பட்டோருக்காக ஒலித்தக் குரல் ஓய்ந்துவிட்டது -ஸ்டாலின்சமூகநீதியின் தூண் சாய்ந்துவிட்டது... ஒடுக்கப்பட்டோருக்காக ஒலித்தக் குரல் ஓய்ந்துவிட்டது -ஸ்டாலின்

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மொழிகளின் 48 ஆயிரம் கல்வெட்டுகளில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானவை தமிழில் உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

English summary
TN CM Eps wrote letter to PM Modi to include Tamil language in Archaeology PG exams
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X