Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்படி இருக்கீங்க அங்கிள்? முதல்வரை நெகிழவைத்த சிறுமி டானியா! போனில் பேசி நம்பிக்கையூட்டிய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக அரசின் நடவடிக்கையால், முக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிறுமி டானியா இரண்டாவது கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைபேசி மூலம் நலம் விசாரித்தார். அமைச்சர் நாசர் நேரில் சென்று சிறுமி டானியாவிடம் நலம் விசாரித்த நிலையில், அவரது அலைபேசி மூலம் முதல்வர் ஸ்டாலின், டானியா மற்றும் அவரது தாயாரிடம் பேசினார்.

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமி டானியா, தனக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதையறிந்த முதலமைச்சர், அந்த சிறுமிக்கு தேவையான உதவிகள் வழங்க உத்தரவிட்டார். அதன்படி சமீபத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

சென்னை ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியா தம்பதியரின் மூத்த மகள் 9 வயது சிறுமி டானியா கடந்த ஆறு வருடங்களாக அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். மூன்றரை வயதுக்குப் பின்னர் டானியாவின் முகத்தில் தோன்றிய சிறிய கட்டி அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. பல்வேறு மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் சிறுமி டானியாவுக்கு அரியவகை முகச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. நாட்கள் செல்லச் செல்ல டான்யாவின் ஒரு பக்க முகம், முழுவதும் சிதையத் தொடங்கியது.

 உறுதியளித்த முதல்வர்

உறுதியளித்த முதல்வர்

மேலும், டான்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரது பெற்றொருக்கு போதுமான பண வசதி இல்லை. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சிறுமி தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவ வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, அமைச்சர் ஆவடி எஸ்.எம்.நாசர், சிறுமி டானியா மற்றும் அவரது பெற்றோரை சந்தித்து, பேசி, சிறுமியின் நோயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

நேரில் சென்ற முதல்வர்

நேரில் சென்ற முதல்வர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெற்று முடிந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட சிறுமி டானியாவை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து 25 நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் சிறுமி டானியா மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்காக நேற்று ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் பகுதியில் சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 மீண்டும் அறுவை சிகிச்சை

மீண்டும் அறுவை சிகிச்சை

மேலும் சிறுமி டானியாவிற்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடுவதற்கு சிரமப்படுவதாலும், சாப்பிடுவதற்கு வாய் திறக்க கடினமாக இருப்பதாலும் இந்த அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. தற்போது சிறுமி டானியா சில நாட்கள் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருந்து முழு உடல் பரிசோதனைக்கு பிறகு முக சீரமைப்பு செய்யப்பட்ட பகுதியில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

சிறுமியிடம் விசாரித்த முதல்வர்

சிறுமியிடம் விசாரித்த முதல்வர்

இந்நிலையில், இன்று அமைச்சர் ஆவடி நாசர் சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் நாசரிடம் நிலவரத்தைக் கேட்டுவிட்டு, அமைச்சர் நாசரின் அலைபேசி வாயிலாக சிறுமி டானியாவிடம் பேசினார். அப்போது கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு சிறுமி டானியாவும், முதல்வர் ஸ்டாலினிடம், "எப்படி இருக்கீங்க அங்கிள்?" எனக் கேட்டு அவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், முதல்வர் ஸ்டாலின், தேர்வு நன்றாக எழுதினாயா என்று சிறுமி டானியாவிடம் விசாரித்தார். அதற்கு டானியா, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் மூலம் வீட்டிலிருந்தபடியே நன்றாக தேர்வு எழுதினேன் என்று கூறினார்.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

மேலும், டானியாவின் அம்மா சௌபாக்கியாவிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயப்படாமல் தைரியமாக இருங்கள் என்று அவருக்கு நம்பிக்கை கூறினார். பல்வேறு கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் அலைபேசியில் பேசி நம்பிக்கையூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+