தமிழகத்தில் ஆன்லைன் தேர்வுகள் இல்லை- கல்லூரிகளில் இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள்தான்...உயர்கல்வித்துறை
சென்னை: தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது வகுப்புகள் திறக்கப்பட்டு கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என கல்வித்துறை தெரிவித்தது. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆன்லைனில் பாடம் நடத்தினால் ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மதுரை மாணவர்கள் போராட்டம்
மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதாவது கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திவிட்டு ஆஃப் லைனில் - நேரடியாக செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் செமஸ்டர் தேர்வுகள் 2 வார காலத்துக்கு ஒத்திவைக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

புதுக்கோட்டையிலும் போராட்டம்
இதேபோல் புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைனில் வகுப்புகளை நடத்தியதால் ஆன்லைன் தேர்வுகளை நடத்துக- நேரடி முறையில் செமஸ்டர் தேர்வை நடத்த கூடாது என மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வந்தது.

உயர்கல்வித்துறை விளக்கம்
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசின் உயர்கல்வித்துறை தற்போது ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் இனி கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆஃப்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்; ஆன்லைனில் நடத்தப்படாது என கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் இனி நேரடியாக மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்பது உயர்கல்வித்துறையின் அறிக்கை.

இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள்தான்
மேலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஆஃப்லைன் தேர்வுகள் நடத்தப்படும்; கொரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications