ஆ.. "ஒரு லட்சம்" பேரா.. தமிழகத்தையே வியக்க வைத்த அந்த "ஒத்த" தொகுதி.. என்னதான் ஆச்சு..!

சீமான் தொகுதியில் ஒரு லட்சம் பேர் வாக்களிக்கவில்லையாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இந்த முறை வாக்கு பதிவு குறைவு என்று தெரியும்.. அதிலும் சீமான் போட்டியிட்ட தொகுதியான திருவொற்றியூர் தொகுதியில் வாக்கு சதவீதம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று முன்தினம் தேர்தல் நடந்து முடிந்தது.. இதில் தமிழகம் முழுவதும் ஓரளவு வாக்கு சதவீதம் பதிவாகி இருப்பினும், சென்னையில் மிகவும் குறைந்துவிட்டது.

அதிலும் முக ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் வாக்கு சதவீத எண்ணிக்கை படுமோசமாகிவிட்டது.. இது விவாதப்பொருளாகவும் உருவெடுத்து வருகிறது. காரணம், முதல்வர் வேட்பாளர் தொகுதியிலேயே இந்த அளவுக்கு குறைவாக வாக்குகள் பதிவாகி உள்ளதே என்பதால்தான்.

 திருவொற்றியூர்

திருவொற்றியூர்

அந்த வகையில், சீமான் போட்டியிடும் திருவொற்றியூரும் விவாதத்தை மட்டுமல்லாமல் சர்ச்சையையும் சேர்த்து கிளப்பி வருகிறது.. இந்த தொகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்டாலின்

ஸ்டாலின்

நான் போட்டியிட்டால் ஸ்டாலின் தொகுதியில்தான் போட்டியிடுவேன், என்னை வென்று காட்டிவிட சொல்லுங்கள் ஸ்டாலினை பார்ப்போம் என்று சவால்விட்ட சீமான், டக்கென திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார்... வழக்கமாக ஒரு கட்சி தலைவர், இன்னொரு கட்சி தலைவரை ஒரே தொகுதியில் போட்டியிடுவது நம் தமிழக அரசியல் வரலாற்றில் இல்லை.. சீமான் இப்படி சொல்லவும், முதல்முறையாக மாற்றத்தை கொண்டு வருவாரோ என்று கணிக்கப்பட்டது..

பதிவு

பதிவு

ஆனால், திருவொற்றியூரை குறி வைத்தார். அதற்கு காரணமும் சொல்லி இருந்தார். இந்த திருவொற்றியூரில் 65% மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளது.. அதிலும் கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இது அரசியல் கட்சியினரிடையே பெருத்த அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது. ஏனென்றால், கடந்த ஆண்டு, 67.98 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தது..

பெண்கள்

பெண்கள்

இப்போது, அதைவிட குறைவு என்றால், 99 ஆயிரத்து, 789 ஆண்கள், 99 ஆயிரத்து, 193 பெண்கள், 14 மூன்றாம் பாலினத்தவர் என, 1 லட்சத்து, 98 ஆயிரத்து, 996 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியதாக தெரிகிறது... அதிலும் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் குறைவாம்.. ஓட்டுப்பதிவில், 66.17 சதவீதமும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பினும், ஓட்டு பதிவில், 64 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர், 9.65 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த தொகுதியில் மட்டும், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள், அதாவது மூன்றில் ஒரு பங்கினர், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தவறியுள்ளனர்... இதற்கு சமூக ஆர்வலர்களும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.. தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கவனித்து, யாரெல்லாம் ஓட்டு போடவில்லையோ, அவர்களின் பெயர்களை அதிரடியாக லிஸ்ட்டில் இருந்து நீக்கினால் தான், இன்னொரு முறை ஓட்டு போட வேண்டும் என்ற உந்துதலும் எண்ணமும் என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்கள்.. தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+