'நீட்' விலக்கு விவகாரத்தில் திமுக அரசின் இயலாமை அம்பலமாகியுள்ளது'.. ஜெயக்குமார் பரபர குற்றச்சாட்டு
சென்னை: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நீட் விலக்கு கோரும் தமிழகம்
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார்.

மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை
இதேபோல் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தங்களது ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. இதில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பது தெரியவந்தது.

அமித்ஷாவை சந்தித்தும் முறையீடு
மேலும், தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட்டது. இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் நீட் மசோதாவை இதுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் திமுக, திமுக மற்றும் அனைத்து கட்சி எம்,பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசினார்கள். இந்த நிலையில்தான் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கான காரணமும் தமிழக அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video

திமுக அரசின் இயலாமை
இந்த நிலையில் இதுபற்றி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். நீட் தேர்வு விலக்கு பெறுவது என்பது சட்டப் பிரச்சினை, சட்டம் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காண முடியும் என்று அவர் கூறியுள்ளார். அதிமுக அரசு நீட் விவகாரத்தை எப்படி கையாண்டதோ, அதேபோல்தான் திமுக அரசும் நீட் விவகாரத்தை கையாண்டு வருகிறது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications