சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு.. தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

TN government should give Rs 10 lakhs compensation to Ramkumar family who arrested in Swathi murder case

ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் மரணமடைந்த ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ராம்குமார் மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் சுவாதி.. இப்போ பரங்கிமலை சத்யா.. சென்னையை உலுக்கிய ரயில்வே ஸ்டேஷன் படுகொலைகள் நுங்கம்பாக்கம் சுவாதி.. இப்போ பரங்கிமலை சத்யா.. சென்னையை உலுக்கிய ரயில்வே ஸ்டேஷன் படுகொலைகள்

English summary
State Human Rights Commission has ordered the Tamil Nadu government to pay Rs 10 lakh compensation to the family of Ramkumar, who was arrested in the Swathi murder case and died in jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X