தஞ்சை தேர் விபத்து - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்
சென்னை: தஞ்சாவூர் தேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆளுநர் ஆர்,என்.ரவி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள களிமேடு கிராமத்தில் இருக்கும் அப்பர் மட கோயிலில் ஆண்டுதோறும் அப்பர் பிறந்த சதய நட்சத்திர நாளில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்
மின் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநரின் மாளிகையின் ட்விட்டரில் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "தஞ்சாவூரில் தேர் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து வேதனை தெரிவித்துள்ள மாண்புமிகு ஆளுநர், ஆர்.என்.ரவி,அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்." என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மின்விளக்குகள் அலங்காரம்
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 10 அடி உயரம் தொண்ட பல்லக்கு தேரில் அப்பர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். இந்த தேரை திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெரியவர்கள் ஏன ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரை சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக சென்றனர்.

உரசிய மின்கம்பி
தேரில் அலங்கார மின் விளக்குகள் ஒளிர்வதற்காக வேண்டி ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே தேரை அப்பர் மடத்திற்கு கொண்டு செல்வதற்காக பக்தர்கள் சாலை வளைவில் இழுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் தேரின் ராட்சத சக்கரம் இறங்கியது. அந்த இடத்தின் மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பி தேரில் உரசியது.

11 பேர் பலி
இதனால் தேரில் பாய்ந்த மின்சாரம் அதனை பிடித்திருந்த பக்தர்களை தாக்கியது. தேர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் மோகன் (22), பிரதாப் (36), ராகவன் (24), தந்தை அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13) ஆகிய 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
Recommended Video

தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர்
அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications