உருவானது தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்! அசத்தல் முன்னெடுப்பு!
சென்னை: கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள் (விதவைகள்), ஆகியோரின் நலனுக்காக தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் என்ற புதிய வாரியத்தை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.
பெண் தொழில் முனைவோர் உட்பட 14 உறுப்பினர்களை கொண்டு ஆதரவற்ற மகளிர் நலனுக்காக இந்த வாரியம் இயங்கவுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ஆதரவற்ற பெண்கள்
தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக "கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்" உருவாக்கப்பட்டுள்ளது.

14 உறுப்பினர்கள்
அரசாணையின் படி இவ்வாரியத்திற்கு 14 அலுவல்சாரா உறுப்பினர்கள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் கைம்பெண்கள் பிரதிநிதிகள் - 4 நபர்கள், (பட்டியலினத்தவர் - 1, பழங்குடியினர் -1, இதர வகுப்பினர் - 2) கல்வியாளர்கள் - 2 நபர்கள், பெண் தொழில் முனைவோர்கள் - 2 நபர்கள், பெண் விருதாளர்கள் - 2 நபர்கள் ,தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் - 4 நபர்கள் என மொத்தம் 14 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளார்கள்.

ஆதரவற்ற மகளிர் நல வாரியம்
இவ்வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மாநில அரசு தேர்வு செய்து நியமனம் செய்வதற்கு ஏதுவாக தகுதி மற்றும் அனுபவமுள்ள நபர்களிடமிருந்து தனித்தனி விண்ணப்பங்களை கல்வித்தகுதி, அனுபவங்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களுடன் 31.10.2022 அன்று மாலை 05.30 மணிக்குள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்ப படிவம்
முகவரி: கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம், கலச மஹால் முதல் தளம், எழிலகம் பின்புறம், சேப்பாக்கம், சென்னை - 05. மேலும், கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கான விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான தகுதி குறித்த விவரங்கள் www.tn.gov.in/(Social Welfare and Women Empowerment Department) என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications