சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'அன்பை போதிப்போம்'.. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

Google Oneindia Tamil News

சென்னை: இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் விழாவின் நாளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டு, வீடுகளில் ஸ்டார், குடில்கள் அமைத்து உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

கிறிஸ்துமசை கொண்டாடும் மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்' சிறுபான்மை மக்களின் உரிமைகளை தமிழக அரசு பாதுகாக்கும்.' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

100% கண்டிப்பா வேணும்.. ஸ்டிரிக்ட்டாக சொன்ன ஸ்டாலின்.. உள்ளே வந்த ஐ பேக் டீம்.. என்ன நடக்கிறது? 100% கண்டிப்பா வேணும்.. ஸ்டிரிக்ட்டாக சொன்ன ஸ்டாலின்.. உள்ளே வந்த ஐ பேக் டீம்.. என்ன நடக்கிறது?

கிறிஸ்துமஸ் பெரு விழா

கிறிஸ்துமஸ் பெரு விழா

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு எனக்கு கொடு" என ஈகையையும், ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்று சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையையும், எதிரிகளையும் நேசியுங்கள் , பகைவருக்கும் நன்மை செய்யுங்கள் என எக்காலத்தும் போற்றத்தக்க உயர்ந்த அன்பையும் போதித்த மனிதநேய மாணிக்கம் இயேசுபிரான் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பெரு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

அனைவரும் சமம்

அனைவரும் சமம்

அன்பும் அமைதியும் அவரது வாழ்விலும் தவழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இவ்விழா கொண்டாடப் படுவதுடன், அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களையும் ஏழை எளியோருக்கு உதவிகளையும் வழங்கி மகிழ்கின்றனர். அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை இந்நாளில் மிளிர்வதை காண்கிறோம்.

 அரசு துணை நிற்கும்

அரசு துணை நிற்கும்

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய கிறிஸ்துவ மக்களின் நலனையும் ,உரிமைகளையும் ,பாதுகாப்பதில் திராவிட முன்னேற்ற கழகமும் ,கழக அரசும் , என்றைக்கும் தோளோடு தோள் சேர்ந்து துணை நிற்கின்றது. அதே வழியில் தொடர்ந்து பயணித்து சிறுபான்மை மக்களின் உரிமைகளை நமது அரசு பாதுகாக்கும். மகிழ்ச்சி பொங்க கொண்டாடப்படும் இந்த விழாவில் கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு- தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து -பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு, என் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் வாழ்த்து

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் வாழ்த்து

இதேபோல் அதிமுக சார்பில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: அன்பின் திருவுருவாம், கருணையின் வடிவமாம் இயேசுபிரான் அவதரித்த திருநாளை, கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பு செலுத்த வேண்டும்

அன்பு செலுத்த வேண்டும்

உன் மீது நீ அன்பு செலுத்துவது போல, அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்று எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த தினத்தை, கிறிஸ்தவப் பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி, வீட்டினை அழகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு, இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

Recommended Video

    POSITIVE STORY ஆதரவற்றோருக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை: காவல் உதவி ஆய்வாளர் அசத்தல்… மக்கள் பாராட்டு!
     ஒற்றுமையுடன் வாழ உறுதியேற்போம்

    ஒற்றுமையுடன் வாழ உறுதியேற்போம்

    ஆண்டவனின் பிள்ளைகளாகிய நாம் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும் இயேசுபிரானின் உயரிய நெறியைப் பின்பற்றி, பகைவர்களிடத்திலும் அன்பு காட்டி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ, இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் பிறந்த நன்னாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, எங்கள் அன்புக்குரிய கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் 'கிறிஸ்துமஸ்' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம். மலர இருக்கும் 2022 புத்தாண்டில் அனைவருக்கும் நல்லனவெல்லாம் நடைபெற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். என இருவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    The government of Tamil Nadu will protect the rights of the minority people. ' The Chief Minister wished MK Stalin a Merry Christmas. AIADMK coordinator O. Panneerselvam and co-coordinator Edappadi Palanisamy wished a Merry Christmas
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X