சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபரிதா தனியார் தோல் தொழிற்சாலை குழுமங்களில் ஐடி ரெய்டு - 2-வது நாளாக நீடிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ஃபரிதா குழுமத்தின் தோல் மற்றும் காலணி தொழிற்சாலை குழுமங்களில், வரி எய்ப்பு புகார் தொடர்பாக, இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபரிதா குழுமம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காலனி மற்றும் தோல் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், வரி எய்ப்பு புகார் அடிப்படையில், சென்னை, வேலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை ஆம்பூர் ஆகிய இடங்களில் இந்த குழுமத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகளில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சென்னை உள்பட இந்த குழுமத்திற்குச் சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, தொழிற்சாலைகளுக்கு உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.

 TN: IT raids at Farida PTannery Group for 2nd day

கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்த நிறுவனங்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வருமான ஈட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் வாங்கி இருப்பதும் பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தோல் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வரி ஏய்ப்பு புகாா் காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் சுமாா் 62 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பரிதா குழுமத்தின் தோல் மற்றும் தொழிற்சாலைகள் என, 10 இடங்களில் நேற்று காலை 8 பணி முதல் வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ண பிரசாத் தலைமையில், 110-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

 TN: IT raids at Farida PTannery Group for 2nd day

இரண்டாவது நாளாக இன்றும், இந்த சோதனை நீடித்து வருகிறது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள கணக்குகள் மற்றும் காலணி ஏற்றுமதி மற்றும் உதிரிபாகங்கள் இறக்குமதி குறித்த கணக்குகளுக்கான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் மீண்டும் ஆவணங்கள் சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜேஎம்எம்.- காங்.ஆளும் ஜார்க்கண்ட்டில் சுரங்க முறைகேடு தொடர்பாக 20 இடங்களில் அமலாக்கப் பிரிவு ரெய்டு ஜேஎம்எம்.- காங்.ஆளும் ஜார்க்கண்ட்டில் சுரங்க முறைகேடு தொடர்பாக 20 இடங்களில் அமலாக்கப் பிரிவு ரெய்டு

English summary
The Income Tax Department has conducted raids for the 2nd day on complaints of tax evasion in private tannery groups called Farida, which are operating in many places in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X