திருவொற்றியூர் கட்டிட விபத்து..நடந்தது என்ன?.. முன்கூட்டியே மக்களை வெளியேற்றாதது ஏன்?அமைச்சர் பேட்டி
சென்னை: திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் இன்று காலை லேசாக விரிசல் விழுந்துள்ளது.
அதைப்பார்த்த மக்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கிய வேளையில் எதிர்பாராதவிதமாக கட்டிடம் மொத்தமாக நொறுங்கி விழுந்தது. இந்த கட்ட்டிடத்தில் வசித்து வந்த மக்கள் அனைவரும் வெளியேறியதால் நல்ல வேலையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

முதல்வர் அறிவிப்பு
ஆனால் மக்கள் பயன்படுத்திய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன. மக்கள் யாரும் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடியிருப்பு கட்டிடத்தில் வீடிழந்த மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், வீடிழந்த 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் உடன்டியாக இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதியில் குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ' மக்கள் வெளியேறி கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் காரணமாக கூட விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை முழுவதும் இதே நிலைதான்
இடிந்து போன குடியிருப்பு 1993ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சென்னை முழுவதும் 23000 வீடுகள் தகுதியற்ற நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிகவும் சேதம் அடைந்த கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற நாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம்.
Recommended Video

ஆய்வு செய்யப்படும்
தமிழகத்தில் பழமையான சேதம் அடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தர கட்டுப்பாடு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தரமற்ற நிலையில் உள்ள வீடுகள் ஆய்வு செய்யப்படும் இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications