TN Plus 2 exam : பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 25ல் துணைத்தேர்வு
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் ஜூலை 25ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு அறிவித்துள்ளார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.4.27 லட்சம் மாணவிகள், 3.94 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும். வரும் 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் 97.95% மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் 97.27%, ராமநாதபுரம் 97.02% உள்ளது. 86.69% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது.
மாணவ, மாணவிகளை தேர்வு எழுத வரச்சொல்லி நிறைய தன்னம்பிக்கை கொடுத்தோம். ஆனாலும் சில லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்தப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications