பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி சதவீதத்தில் முதல் மாவட்டம், கடைசி மாவட்டம் எது தெரியுமா?
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் எந்த மாவட்டம் முதலிடத்தை பிடித்திருக்கிறது, எந்த மாவட்டம் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது தெரியுமா?
Recommended Video
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தேர்வு முடிவை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தை பெரம்பலூர் மாவட்டம் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்தடுத்த இடத்தில் விருதுநகர் (97.27%), ராமநாதபுரம் (97.02%) உள்ளது.

தேர்ச்சி சதவீதம்
அது போல் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடம் வேலூருக்கு! இங்கு 86.69 சதவீதம் ஆகும். பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்.

மதிப்பெண் பட்டியல்
மதிப்பெண் பட்டியல்கள் வெளியான பின்னர் மாணவர்கள் பொறுமையாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியாக உள்ளது. மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தேர்ச்சி
2020ஆம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 93.76% ஆக உயர்ந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 89.06% அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு உதவிபெறும் பள்ளிகள் 94.87% தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.15% முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள்
தேர்வெழுதிய 3,095 மாற்றுத் திறனாளிகளின் 2,824 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 74 சிறைவாசி மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 71 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 634 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடம்
வேதியியல் பாடத்தில் 1500 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 1541 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 1858 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் 47 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். விலங்கியல் பாடத்தில் 22 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 3827பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வணிகவியல் பாடம்
வணிகவியல் பாடத்தில் 4634 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணக்கு பதிவியல் பாடத்தில் 4540 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பொருளியல் பாடத்தில் 1146 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிகப் பயன்பாடு பாடத்தில் 2818பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 1151 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications