சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போலீஸ் கட்டிங்.. முறுக்காத மீசை.. அரைக் கை சட்டை.. லூஸ் பேன்ட்.. அரசின் அதிரடி கட்டுப்பாடுகள்

பள்ளி கல்வி துறை மாணவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிக்கூடம் போகலாமா.. அதாவது பள்ளிக்கூடமெல்லாம் திறக்கப் போகுது. படிக்கப் போகலாமா.. தயாராகிட்டீங்களா மாணவச் செல்வங்களே.. அதற்கு முன்பு உங்களுக்கு 11 கண்டிஷன் இருக்கு.

இந்த கண்டிஷனை நாம போடவில்லை. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைதான் பிறப்பித்திருக்கிறது. மாணவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த கட்டுப்பாடுகள் இவை.

முன்பெல்லாம் இதுபோன்ற கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்காது. தலை முடிய படிய வாரியிருக்க வேண்டும், ஒட்ட வெட்டியிருக்க வேண்டும். பட்டனை முழுசாக போட்டிருக்க வேண்டும். இவ்வளவுதான் இருக்கும். ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. எனவே கண்டிஷன்களும் கூட இப்போது மாறி விட்டன.

TN School Education Dept has informed rules for the students

பள்ளிக்கு வரும் நேரம், பள்ளிக்கு வரும் கோலம், பள்ளிக்குள் நடந்து கொள்ளும் விதம் என பிரித்து பிரித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம், ஆசிரியர்களும் சரி, மாணவர்களும் சரி பள்ளிக்குள் கட்டுப்பாட்டுடன், ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

அந்த வகையில், இப்போதும் பள்ளிக்கல்வித்துறை சில கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல்.

கணவன் போல பழகினான்... எமனாக மாறி எரித்தான்- சென்னை கொரட்டூரில் பயங்கரம்கணவன் போல பழகினான்... எமனாக மாறி எரித்தான்- சென்னை கொரட்டூரில் பயங்கரம்

1. காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.

2. பைக் ., செல்போன், ஸ்மார்ட்போன் பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

3. லோ ஹிப் , டைட் பேண்ட் அணிந்து வரக்கூடாது.

4. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும் அது இறுக்கமாக, குட்டையாக இருக்கக்கூடாது.

5. தலைமுடி சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும்! போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி.

6. கருப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி.

7. டக் இன் செய்யும் போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக் இன் செய்யக்கூடாது.

8. மேலுதட்டை தாண்டி முறுக்கு மீசை தாடி வைக்க கூடாது.

9. கைகளில் வளையம் கயிறு செயின் அணியக்கூடாது.

10. பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும்.

11. விடுமுறை எடுக்கும்போது பெற்றோர் ஆசிரியர் அனுமதி கையெழுத்து பெற்ற பின் மட்டுமே எடுக்க வேண்டும்.

என்ற 11 கட்டளைகள் பிறப்பித்து அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதாக இந்த தகவல் தெரிவிக்கிறது.

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் கூட ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவையும் அமலில் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.

English summary
TN Government school students have been ordered to arrive at school at 9.15 am
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X