சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று இயற்கை மருத்துவ தினம்.. நோயற்ற இயற்கை பாரதத்தை உருவாக்க விழிப்புணர்வு

Google Oneindia Tamil News

சென்னை: நோயற்ற இயற்கை பாரதத்தை உருவாக்குவதே இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கைநுட்பத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இன்று இயற்கை மருத்துவ தினம்.. நோயற்ற இயற்கை பாரதத்தை உருவாக்க விழிப்புணர்வு

    இன்று நவம்பர் 18 இந்தியாவில் இயற்கை மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. நம்முடைய தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் தம்மை இயற்கை மருத்துவ முறையில் இணைத்துக் கொண்ட நாளான இன்று இயற்கை மருத்துவ தினமாக நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

    இயற்கையுடன் இணைந்த வாழ்வின் மூலமாக நோய் வராமல் பாதுகாக்கவும், உடலில் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய கோளாறுகளை சரி செய்யும் பொருட்டும் இயற்கை ஆற்றல்களையும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முழுமையான ஆரோக்கியமான வாழ்வினை தக்க வைக்கக் கூடிய ஒரு அரிய மருத்துவ முறை இயற்கை மருத்துவ முறையாகும்.

    கார்த்திகை தீபநாளன்று கிரிவலம் செல்ல அனுமதி வேண்டும்! அதிமுக வேண்டுகோள்! கார்த்திகை தீபநாளன்று கிரிவலம் செல்ல அனுமதி வேண்டும்! அதிமுக வேண்டுகோள்!

    நோய்க்கான காரணங்கள்

    நோய்க்கான காரணங்கள்

    மேலும் இயற்கை மருத்துவத்தில் நோய்க்கான காரணங்களையும் அதன் அடிப்படையையும் கண்டறிந்து அதனை வேரறுப்பது மூலம் நோய்களை எளிதாக குணப்படுத்த முடியும் என்பது உறுதியாகிறது. இந்த நான்காவது தேசிய இயற்கை மருத்துவ தினத்தை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

    உணவு முறைகள்

    உணவு முறைகள்

    அவற்றுள் இலவச மருத்துவ ஆலோசனை, ஆரோக்கியத்திற்கான இயற்கை மருத்துவ கருத்தரங்கம், இயற்கை உணவுகள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கக் கூடிய நோய் எதிர்ப்புப் ஆற்றலுக்கான பொடி வழங்கியது, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மாணவர்களின் ஊமை நாடகம், இயற்கை & யோகா மருத்துவ முறைகள் மற்றும் உணவு முறைகளின் கண்காட்சி போன்றவை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவ்விழாவில் இந்திய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதி துறையின் ஆணையர் கணேசன் IAS, அரசு யோகா & இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு. மணவாளன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    டாக்டர் ஒய் தீபா

    டாக்டர் ஒய் தீபா

    இந்த விழாவில் பேசிய அரசு யோகா மற்றும் அரசு மருத்துவமனையின் கைநுட்பத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா கூறுகையில் இந்த நாளின் முக்கிய நோக்கமே நோயற்ற இயற்கை பாரதம் என்பதுதான். இதற்காக மக்களுக்கு இயற்கை மருத்துவம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது மருந்தில்லாத மருத்துவம் ஆகும்.

    நெருப்பு

    நெருப்பு

    நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நோய்க்கான காரணியை கண்டறிந்து குணப்படுத்துவதுதான் இயற்கை மருத்துவம். இதில் நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, காந்தக சிகிச்சை, அரோமா சிகிச்சை, யோகா சிகிச்சை உள்ளிட்டவை கொடுக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப்பட்டது. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த இனிய பாரதத்தை நோயற்ற பாரதமாக மாற்ற நம் இயற்கை மருத்துவத்தோடு இணைந்திருப்போம் என்றார்.

    நோய்கள்

    நோய்கள்

    இந்த விழாவில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் இயற்கை பானங்கள் வாழை இலையில் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அது போல் அக்குபஞ்சர், அக்குபிரஷர் உள்ளிட்ட சிகிச்சைகளும் காட்சிப்படுத்தப்பட்டு அதன் மூலம் குணப்படுத்தக் கூடிய நோய்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    English summary
    Today Naturopathy day is being observed Today Naturopathy day is being observed in Chennai Anna Government Yoga and Naturopathy college and hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X