தப்பு பண்ணுறவங்களை தான் கொண்டாடுறாங்க.. பெரிய நடிகர்கள் ஆதரவு தரணும்.. நடிகை ராதிகா
சென்னை: கேரவன் விவகாரம் குறித்து விளக்கம் தான் கூறினேன், புகார் அளிக்கவில்லை. திரைப்படத் துறையில் முன்பு போல் இப்போது பாலியல் அத்துமீறல்கள் இல்லை. அனைவரும் நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். பெரிய நடிகர்கள் ஆதரவு தந்தால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நடிகை ராதிகா கூறினார்.
ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில், நடிகை ராதிகா சரத்குமார் அண்மையில் அளித்த பேட்டியில் பாலியல் வன்முறைகள் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் உள்ளது. கேரவனில் ரகசியமாக கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கேரவன் குற்றச்சாட்டு தொடர்பாக, ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தொலைபேசியில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை சிறப்பு புலனாய்வுக் குழு மறுத்துள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராதிகா கூறியதாவது:
இப்போது இருக்கிற காலக்கட்டத்தில் நான் எல்லா புது ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறேன். பாதுகாப்பு என்பது முன்பு இருந்தது போல் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் எல்லா ஆர்டிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஹீரோ, ஹீரோயின்களை கவனிக்கும் தயாரிப்பாளர்கள் அனைத்து ஆர்டிஸ்டுகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சினிமா துறை மட்டும் இல்லை எல்லா துறைகளிலும் எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
தற்போது இப்போதுள்ள இளைஞர்களுக்கு மைண்ட்செட்டே தவறாக இருக்கிறது. நான் முன்பு பார்த்தது போல் இப்போது பாலியல் அத்துமீறல் இல்லை என்றே சொல்வேன். ஒருவேளை எனக்கு தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் முன்பு நடந்தது. முன்பு சூட்டிங்கின் போது என் அருகில் வந்து மற்ற நடிகைகள் அமர்வார்கள், மேம் உங்க கிட்ட உட்கார்ந்துகொள்ளலாமா என்று.. ஒருமாதிரியாக பேசுறாங்க என்று என் பக்கத்தில் உட்காந்திருக்காங்க..
ஒரு பெரிய நடிகை ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்திருக்காங்க. அந்த நடிகைக்கு ஒரு நடிகர் குடித்துவிட்டு வந்து மிஸ் பிகேவியர் பண்ணாங்க.. அப்போ அந்த நடிகை எனது அருகே அமர்ந்திருந்து என்னிடம் கூறுகிறார். அப்போது எனது கணவரும் அருகில் இருக்கிறார். அவர் சொல்கிறார், அந்த நடிகர் குடித்திருக்கிறார். நீ ஒன்றும் பேசாதே என்று சொன்னார். அப்போது ஒருவர் என் கணவரை அழைத்து சென்றுவிட்டார்.
அந்த நடிகரை எந்த அளவு பேச வேண்டுமோ அந்த மாதிரி பேசிவிட்டேன். உடனே அந்த நடிகை என்னை கட்டிப்பிடித்து சொன்னாங்க.. எனக்கு பாஷை தெரியாது.. ஆனால் ஐ லவ் யூ என்று சொன்னாங்க.. இப்போ வரைக்கும் அந்த நடிகை எனக்கு பிரெண்டாக இருக்காங்க.. எனவே தப்பு நடந்த இடத்தில் நான் தவறை தட்டி கேட்கிறேன். இதை போலீஸ் நிலையத்தில் கம்ப்ளைண்ட் செய்து என்ன பண்ண முடியும்.
எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால், நிறைய பேர் தப்பு பண்ணுவதை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களை தான் இந்த சமூகம் மேலே தூக்கி வச்சு கொண்டாடுறீங்க.. ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஒரு கதை இருக்கிறது. இது எனக்கு தெரியும். அந்த ஹீரோயினுங்க எல்லாம் எங்க பக்கத்தில உட்காந்திருப்பாங்க.. ஒரு பக்கம் சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேசில் இருக்காங்க.. ஒரு பக்கம் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக இருக்காங்க.. ஆனால் இங்க நாங்க ஒரு கேவலமான விஷயத்தை பேசிட்டு இருக்கோம். இது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
ஒன்று மட்டும் சொன்னால் போதும்.. நான் இந்த பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு எல்லாருடன் சேர்ந்து நான் சரியாக செயல்படுவேன் என்று சொன்னால் போதும்.. சினிமா மாதிரி ஒரு நல்ல இன்டஸ்ட்ரி எங்கேயும் இல்லை. எல்லாருடனும் நான் பணிபுரிந்து இருக்கிறேன். தமிழில் இருக்கிற எல்லா நடிகர்களும் உங்கள் கூட நடித்த நடிகைகளுக்காக குரல் கொடுக்கலாமே.. குரல் கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications