சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரபல நடிகையின் அழகு.. எம்ஜிஆரை பார்க்க நேரா "தோட்டத்துக்கே" போய்ட்டேன்.. துணிச்சல் ஜெ: நெகிழும் லதா

பிரபல நடிகை லதா, எம்ஜிஆர், ஜெயலரிதாவின் இயல்புகளை தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.. எப்படி இருந்த கட்சி, இன்றைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தமாக உள்ளதாக நடிகை லதா ஆதங்கப்பட்டு சொல்லி உள்ளார்.

பிரபல நடிகை லதா.. தமிழகத்தின் புகழ்பெற்ற மூத்த நடிகை.. மிகச்சிறந்த நாட்டியக்கலைஞர்.. எம்ஜிஆருடன் பல படங்களில் இணைந்து நடித்தவர்.. அரசியலிலும் தலைகாட்டியவர்..

இவர் எத்தனையோ முறை பத்திரிகைகளுக்கு பேட்டிகளை தந்துள்ளார்.. அந்த பேட்டிகளில் மறக்காமல் குறிப்பிடும் விஷயம் இது ஒன்றுதான்.

இது அதிமுக ராசி.. “முதலில் பூஜ்ஜியம்’.. நவம்பரில் தெளிவு கிடைக்கும்.. கடம்பூர் ராஜூ ஆரூடம்! இது அதிமுக ராசி.. “முதலில் பூஜ்ஜியம்’.. நவம்பரில் தெளிவு கிடைக்கும்.. கடம்பூர் ராஜூ ஆரூடம்!

 நடிகை லதா

நடிகை லதா

"எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் மிகுந்த நிதி பற்றாக்குறையால் கஷ்டப்பட்டார். அப்போது ஈரோடு, தேனி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எம்ஜிஆர் தலைமையில் நாட்டிய நாடகம் நடந்தது. இதில் நான் கலந்து கொண்டு நாட்டியம் ஆடினேன்... இதன் மூலம் ரூ.35 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியை கொண்டு தான் அதிமுக கடந்த 1977-ம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது. இதனால் அதிமுக வளர்ச்சியில் என்னுடைய பங்கும் உள்ளது. இதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்" என்று கூறுவார்..

 35+ லட்சம்

35+ லட்சம்

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் லதா.. அந்த பேட்டியிலும் இந்த நிகழ்வை பெருமையாக குறிப்பிட்டதுடன், தற்போதைய அதிமுக நிலைமை குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது: "அதிமுகவில் நடப்பதை எல்லாம் பார்த்தாலே வருத்தமாக உள்ளது.. ஏன் என்றால், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, நான் 3வது பெண் உறுப்பினர்.. அதிமுகவுக்காக நான் தமிழ்நாடு முழுக்க டான்ஸ் ஆடியிருக்கேன்.. 30 லட்சம் ரூபாய் திரட்டி கட்சிக்காக தேர்தல் நிதியாக தந்திருக்கேன்.. நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வருமாறு அப்பவே என்னை எம்ஜிஆர் அழைத்தார்..

 கிளாஸிக்கல் டான்ஸ்

கிளாஸிக்கல் டான்ஸ்

"இப்பதான் சினிமாவில் வந்திருக்கேன், கொஞ்ச நாள் கழித்து கட்சிக்கு வருகிறேன், அதுவும் இல்லாமல் அரசியலில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை" என்று எம்ஜிஆரிடம் சொன்னேன்.. கட்சியில் உன் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றார், அதற்காகத்தான் நடன நிகழ்ச்சிகளை செய்து, நிதி திரட்டி தந்தேன்.. ஆனால், அதை கடைசிவரை எம்ஜிஆர் மறக்கவேயில்லை. இப்போது அப்படிப்பட்ட கட்சியை பார்க்கும்போது, நிஜமாகவே எனக்கு வருத்தமாக இருக்கு.. இவங்க ஏன் இப்படி செய்றாங்கன்னு எனக்கு சத்தியமா தெரியல.. கடவுள்தான் அதிமுகவை காப்பாத்தணும்..

 ராமாவரம் தோட்டம்

ராமாவரம் தோட்டம்

அதேபோல சினிமாவை எடுத்துக் கொண்டால்கூட, இப்போதுதான் புரளிகள், கிசுகிசுக்கள் நிறைய வந்துவிட்டது.. யார் யாருடன் போனால் இவங்களுக்கென்ன? யார் யாருடன் நட்பாக இருந்தால் என்ன? சினிமா துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே.. இப்போகூட யாரோ ஒருத்தர் கிரிக்கெட் பார்த்துவிட்டு ஒரு கமெண்ட் போட்டாராம்.. பல்லாண்டு வாழ்க படத்தில் லதாவை எம்ஜிஆர் தடவுவதுபோல், மேட்ச்சில் பந்தை தடவுறாரே என்று யாரோ கமெண்ட் போட்டார்களாம்.. இதெல்லாம் தேவையா? பப்ளிசிட்டிக்காக எதையாவது இப்படி எழுதிட்டு இருக்காங்க.. முன்னாடி எல்லாம் இப்படி பேசவே மாட்டாங்க..

தோட்டத்திலேயே

தோட்டத்திலேயே

உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று பார்த்து வருவேன்.. நான் போனால் மட்டும், மேலே சென்று தலைவரை போய் பார்த்து பேசிட்டு வா..ம்மா என்று ஜானகி அம்மா அன்போடு என்னிடம் சொல்வார்.. வேற எந்த நடிகைக்கும் அந்தம்மா இப்படி சலுகை தந்தது இல்லை.. என்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாங்க.. நானும் அவரிடம் பாசமாக இருப்பேன்.. ஒருமுறை என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல்போனபோது எம்ஜிஆர் ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார்..

 அட்மிட்

அட்மிட்

அம்மா அட்மிட் ஆனதை ஏன் எனக்கு முன்னாடியே சொல்லவில்லை.. எத்தனை முறை, உன் அம்மா கையால் நான் சாப்பிட்டிருப்பேன், உடல்நலம் குறித்து தகவல் சொல்லக்கூடாதா என்று கடிந்து கொண்டார்.. உடனே டாக்டர் பிசி. ரெட்டியை சந்தித்து, அந்தம்மா சிகிச்சை செலவு முழுக்க நானே ஏற்று கொள்கிறேன், அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போங்க என்றார்.. நான் கண்கலங்கி விட்டேன்.. அதையெல்லாம் என்னால் மறக்க முடியாது.

 போல்ட் + பியூட்டிஃபுல்

போல்ட் + பியூட்டிஃபுல்

ஜெயலலிதாவுடன் சினிமாவில் நடிக்கும்போது நான் அவ்வளவாக பேசியதில்லை.. அதற்கு பிறகு, நான் நிறைய முறை போயஸ் கார்டன் வீட்டுக்கு செல்வேன்.. ஜெயலலிதா வீட்டில் டாலி என்று ஒரு பியூட்டிஷன் இருந்தாங்க.. எப்பவும் ஜெயலலிதா கூடவே அவங்க இருப்பாங்க..அவங்க எனக்கும் மேக்கப்புக்கு வருவாங்க.. நானும் ஜெயலலிதாவும் நிறைய முறை கிரிக்கெட் மேட்ச் போயிருக்கோம்.. முன்னாடியெல்லாம் ரெஸ்ட்டாரெண்ட்டுகள் எதுவும் இருக்காது.. காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவோம்.. நிறைய விஷயங்களை என்னுடன் அவர் ஷேர் செய்து கொள்வார்.. போல்ட் & பியூட்டிபுல் ஜெயலலிதா.. நான் சந்தித்த துணிச்சலான பெண்ணும்கூட" என்றார்.

English summary
Top star MGRs Good qualities and Jayalaliths fantastic Character, explains Actress Latha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X