பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்! காலை 7 டூ மாலை 6! முழு விவரம் இங்கே!
சென்னை: மெட்ரோ ரயில் பணிகள், திமுக பொதுக்குழு, விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம், என காவல்துறையின் அனுமதி பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நாளை சென்னையில் நடைபெறவிருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்கூட்டியே அறிந்து கொள்வதன் மூலம் தேவையற்ற அலைச்சல்களை தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மக்களுக்கும் சென்னையில் வசித்து வரும் வெளியூர்காரர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறது ஒன் இந்தியா தமிழ்.
இதனிடையே போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;

டி.ஜி.எஸ் தினகரன் சாலை
சென்னை கிரீன்வேஸ் சாலை- டி.ஜி.எஸ் தினகரன் சாலை சந்திப்பில் சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் நடைபெற உள்ளதால் ஒருவார காலத்திற்கு தற்காலிக போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வந்தது. மேலும் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றம் இன்று முதல் 11-ந்தேதி வரை 4 நாட்கள் கூடுதலாக கீழ்க்கண்டவாறு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கீரீன்வேஸ் சாலை சந்திப்பில் இருந்து செல்பவர்கள் இடதுபுறமாக திருப்பிவிடப்பட்டு காமராஜர் சாலை வழியாக திரும்பி சீனிவாச அவென்யூ மூலமாக, ஆர்.கே.மட சாலை அடைந்து அவர்களது செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

கீரீன்வேஸ் ரோடு
இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்தினால் காமராஜர் சாலை சீனிவாச அவென்யூ சந்திப்பில் இருந்து காமராஜர் சாலை கீரீன்வேஸ் ரோடு சந்திப்பு வரை, ஒரு வழி பாதையாகவும், சீனிவாச அவென்யூ மற்றும் ஸ்கூல் ரோடு முழுவதும் ஒரு வழிபாதையாகவும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. காமராஜர் சாலை, சீனிவாச அவென்யூ மற்றும் ஸ்கூல் ரோடு முழுவதும் போக்குவரத்து இடையூறாக எந்த வாகனமும் நிறுத்த அனுமதி கிடையாது.

அமைந்தகரை
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, ஈ.வி.ஆர். சாலை, ஷெனாய் நகரில் அரசியல் கூட்டம் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. ஈ.வி.ஆர்.சாலையில் அண்ணா வளைவில் இருந்து ஈகா சந்திப்பு நோக்கி சிறு மற்றும் கனரக வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் 3-வது அவென்யூ, அண்ணா நகர் ரவுண்டானா, கே4 அண்ணாநகர் பி.எஸ்., 3-வது அவென்யூ எக்ஸ் புதிய ஆவடி சாலை சந்திப்பு, நியூ ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை மற்றும் பிளவர்ஸ் சாலை வழியாக ஈ.வே.ரா சாலையை அடையலாம்.

ஈகா தியேட்டர் சந்திப்பு
ஈ.வே.ரா. சாலையில் இருந்து வெளியேறும் அனைத்து வணிக வாகனங்களும் ஈகா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி குருசாமி பாலம், ஸ்டெர்லிங் சந்திப்பு, ஸ்டெர்லிங் சாலை வழியாக செல்லலாம். தேவைப்படின் கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை எக்ஸ் நியூ ஆவடி சாலை சந்திப்பில் இருந்து ஈ.வே.ரா. சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது. பொது வாகனங்கள் (உள்வரும் திசை) புல்லா அவென்யூ சந்திப்பில் திரு.வி.க. பார்க், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை மற்றும் டெய்லர்ஸ் சாலை வழியாக செல்லலாம். பொது வாகனங்கள் (வெளியே செல்லும்) ஈ.வே.ரா சாலை - டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நியூ ஆவடி சாலை மற்றும் ஹால்ஸ் சாலை புல்வா அவென்யூ வழியாக ஈ.வே.ரா. சாலையினை அடையலாம்.

நியூ ஆவடி சாலை
நியூ ஆவடி சாலை எக்ஸ் ஹால்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஈ.வே.ரா சாலை நோக்கி பொது வாகனங்கள் அனுமதிக்கப்படாது. நியூ ஆவடி சாலையில் இருந்து டெய்லர்ஸ் சாலையை நோக்கி ஹால்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்ல இயலாது. சேத்துப்பட்டு சந்திப்பில் இருந்து ஹாரிங்டன் சாலையில் வரும் வாகனங்கள் நமச்சிவாயபுரம் பாலம் சந்திப்பிலிருந்து ஈ.வே.ரா சாலையை நோக்கி அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் நமச்சிவாயபுரம் பாலம், சூளைமேடு, என்.எம்.ரோடு வழியாகச் செல்லலாம். என்.எம். சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நமச்சிவாயபுரம் சந்திப்பில் இருந்து ஈ.வே.ரா சாலை நோக்கி அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் நமச்சிவாயபுரம் சந்திப்பில் இருந்து ஹாரிங்டன் சுரங்கப்பாதை மற்றும் சேத்துப்பட்டு சந்திப்பு நோக்கிச் செல்லலாம்.

அண்ணா நகர் திருமங்கலம்
வி-5 திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்டேட் ரோடு நிழற்சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) "பன் ஸ்ட்ரீட்ஸ்" என்ற நிகழ்வு நடைபெற இருப்பதால் ஆபிசர் காலனி சந்திப்பு முதல் டி.ஏ.வி. நிழற்சாலை சந்திப்பு வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மேற்கண்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் இருந்து எஸ்டேட்ரோடு கோல்டன் பிளாட் வழியாக அம்பத்தூர், ஆவடி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் பாடி மேம்பாலம் டி.வி.எஸ். லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக செல்ல வேண்டும். திருமங்கலத்தில் இருந்து ஜெ.ஜெ.நகர் முகப்பேர் மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் வளையாபதி சாலை வழியாக வலது புறம் திரும்பி பாரி சாலை வழியாக வலது புறம் திரும்பி திருவள்ளூர் சாலை வழியாக செல்லலாம்.

டி.வி.எஸ். லூக்காஸ்
ஆவடி, அம்பத்தூர் ஓ.டி.யில் இருந்து கோல்டன் காலனி வழியாக திருமங்கலம் அண்ணாநகர் செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் டி.வி.எஸ். லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக 100 அடி சாலை வழியாக செல்ல வேண்டும். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் உள்ள இ4 அபிராமபுரம் போக்குவரத்து காவல் சரகத்திற்கு உட்பட்ட துர்க்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 5 மணியளவில் "அலார்ட்" நிறுவனம் சார்பாக முதலுதவி கற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வையும் சகிப்பு தன்மையும் ஏற்படுத்துவதற்காக ஓட்டம், நடை மற்றும் மிதிவண்டி, இரு சக்கர வாகனம் ஓட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முட்டுகாடு வரை
எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து தொடங்கி டி.ஜி.எஸ் தினகரன் சாலை முதல் முட்டுகாடு வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 5 மணி முதல் 8 மணி வரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. லைட் ஹவுசில் இருந்து சாந்தோம் ஹை ரோடு மற்றும் மந்தவெளி சந்திப்பில் இருந்து தெற்கு கால்வாய் கரை சாலை, அடையார் நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கெனால் பேங்க் ரோடு சந்திப்பில் இருந்து திரு.வி.க பாலத்திற்கு அனுமதிக்கப்படாது, அதற்கு பதிலாக வலது பக்கமாக திரும்பி மந்தவெளி சென்றடையலாம். கிரீன்வேஸ் சாலையில் இருந்து மற்றும் ஆர்.கே.மட் ரோடு வழியாக பிராட் கேசில் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடையார் இசைக் கல்லூரி சந்திப்பில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது, டி.ஜி.எஸ். தினகரன் சாலை முதல் டி.வி.கே பாலம் வரை சென்று வலது பக்க உள் பாதையில் சென்று மந்தவெளியை அடையலாம்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications