செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோருவது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை: அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் போது செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோருவது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.
அதேபோல், செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோருவது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது: - இந்த விவகாரம் ஒவ்வொருவரின் தனிமனித விருப்பம். அந்த விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது. செந்தில் பாலாஜியை கைது செய்த உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு ஆஞ்சியோ செய்ததில் அவருக்கு இரத்த நாளங்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 80, 90 சதவிகிதம் அளவுக்கு பிளாக்ஸ் உள்ளது.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே செந்தில் பாலாஜியின் துணைவியார் இரண்டாவது மருத்துவ ஆலோசனையும் கேட்டார்கள். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இரண்டாவது ஆலோசனையும் பெறப்பட்டது. அதில் அவர்களும் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றனர்.
அமலாக்கத்துறையும் இ.எஸ்.ஐ மருத்துவர்களை அழைத்தது. அந்த மருத்துவர்களும் இதை உறுதி செய்தார்கள். இப்போது அவரது மனைவி அப்பல்லோ அல்லது காவேரியில் ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுடைய தனிமனித விருப்பத்தைதான் நிறைவேற்ற வேண்டுமே தவிர யாரையும் நாம் கட்டாயப்படுத்த முடியாது" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications