சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்னாவா? செல்லாது செல்லாது.. சசிகலாவுக்கு ஜெர்க் கொடுத்த டிடிவி! வண்டியைக் கட்டும் ’சவுத்’ தலைகள்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்த்து இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் பேசி இருக்கிறார் டிடிவி தினகரன். குறிப்பாக சசிகலா குறித்த அவரது பேச்சு தென் மாவட்டங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

எம்ஜிஆர் தோற்றுவித்து ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாட்டோடு வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கமான அதிமுக தற்போது மிகவும் சிக்கலான சூழலை சந்தித்து வருகிறது. எடப்பாடி - ஓபிஎஸ் இடையேயான அதிகார யுத்தத்தால் ஒரு எதிர்க்கட்சியாக கூட செயல்ப முடியாத அவல் நிலையில் இருப்பதாக தொண்டர்கள் புலம்புகின்றனர்.

ஜெயலலிதா மனைவிக்கு பிறகு அவரது தோழியான சசிகலா முதல்வராக பரவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அவர் சிறை செல்ல நேர்ந்தது.இதனை அடுத்து நாளுக்கு நாள் யார் பெரியவர் என்ற யுத்தத்திலேயே ஐந்து ஆண்டுகள் கழிந்து விட்டது.

ஆப்டிக்கல் இல்யூஷன்: ஒரு நாய் இங்க இருக்கு.. இன்னொரு நாய் எங்கே.. கண்டுபிடிச்சா நீங்க கிரேட்!ஆப்டிக்கல் இல்யூஷன்: ஒரு நாய் இங்க இருக்கு.. இன்னொரு நாய் எங்கே.. கண்டுபிடிச்சா நீங்க கிரேட்!

அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக தற்போது அதிகார மோதலில் சிதறுண்டு கிடைக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இவர்களுக்கு இடையே சசிகலா என முக்கோண மோதலில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் இருக்கிறது என அவர் தரப்பு கூறி வருவது நூற்றுக்கு நூறு உண்மைதான். அதே நேரத்தில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரம் மையமாக வளம் வந்த தன்னை ஒரேடியாக கட்சியை விட்டு நீக்கியதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் ஓ.பன்னீர்செல்வம் பல அஸ்திரங்களை பயன்படுத்தி வருகிறார். ஆனால் அவை யாவும் கை கொடுக்காமல் போய்விட்டது.

ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா

ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா

இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பை இறுதியாக நம்பி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த வியூகம் வகுத்து வருகிறார். விரைவில் இருவரது சந்திப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவரும் சசிகலாவின் நெருங்கிய உறவினருமான டிடிவி தினகரன் கூறி இருக்கும் கருத்துக்கள் அதிமுகவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக பேசிய அவர் அதிமுகவுடன் இணையும் வாய்ப்பு இல்லை எனவும், தான் சொன்னதை சசிகலா கேட்கவில்லை எனவும் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

இணைய வாய்ப்பில்லை

இணைய வாய்ப்பில்லை

கடந்த சில வருடங்களாகவே அதிமுகவை கைப்பற்றுவோம் என கூறிவந்த டிடிவி தினகரன் அதிமுகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைய வேண்டிய அவசியமில்லை எனவும், அமமுக தனித்தே செயல்படும் என அதிரடியாக அறிவித்திருக்கிறார். மேலும் சசிகலா சிறை சென்றபோது கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்க வேண்டாம் என சசிகலாவிடம் தான் கூறியதை அவர் கேட்கவில்லை என கூறியுள்ள தினகரன், எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக தான் விமர்சித்தார்.

தொடை நடுங்கி

தொடை நடுங்கி

சுயநலம் ஆணவம் அகங்காரத்தால் சொந்த கட்சிக்காரர்களை விலைக்கு வாங்கும் அளவில் கட்சி தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை தொடை நடுங்கி என மிகக் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்த டிடிவி தினகரன் எடப்பாடி முதல்வராக தேர்வு செய்தது தவறு என்ற அப்போதே சசிகலாவிடம் சொன்னேன் அவர் கேட்கவில்லை எனக் கூறியிருப்பது தான் சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த போது சசிகலா தான் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

கடும் அதிர்வலைகள்

கடும் அதிர்வலைகள்

பின்னர் அதிமுகவில் அவர் உரிமை கோரிய நிலையில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் செயலாளர் என கூறிவரும் அவர் தற்போது நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த நிலையில் தான் நெருங்கிய உறவினரான சசிகலா குறித்தும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ள கருத்தும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தென் மாவட்ட நிர்வாகிகளுடைய கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது தினகரனும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு 'தண்ணி' காட்டிவிட்டார் என்கிற ரத்தத்தின் ரத்தங்கள்.

English summary
TTV Dhinakaran has spoken to give shock treatment to O. Panneerselvath, who was expecting to form an alliance to put pressure on AIADMK's Edappadi Palaniswami. Especially, his speech about Sasikala has created strong vibrations in the southern districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X