இனிமே எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்? ’சவுத்’தில் களமிறங்கும் மாஜி! ஓபிஎஸ்க்கு அவ்ளோ தான் போலயே!
சென்னை : அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் அவர் தரப்பு ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, தென் மாவட்டங்களில் இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு கொண்டுவர முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் தற்போது இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை தங்கள் தரப்புக்கு இழுத்து விட்டால் முழுமையாக ஓரம் கட்டிவிடலாம் என நினைத்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. இதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்கள்
தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் செல்வாக்கு தனக்கு இருப்பதால்தான் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார் என கருதுகிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களின் பாதிக்கு பாதி அதாவது ஆறு மாவட்ட செயலாளர்களில் 3 மாவட்ட செயலாளர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு பன்னீர்செல்வத்திற்கு இருக்கிறது.

ஓபிஎஸ் தரப்பு
திண்டுக்கல்லில் இருந்து ஒன்றிய செயலாளர்களின் ஆதரவு ஓபிஎஸ்க்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தங்கள் தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என எடப்பாடி தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது .சட்டப் போராட்டங்கள் ஒருபுறம் தொடர்ந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரைமறைவு வேலைகளிலும் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டிருக்கிறது.

மாஜி அமைச்சர்
குறிப்பாக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் தற்போது ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்காக மூத்த அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக இயங்கி வரும் நிலையில் தென்மாவட்டத்தில் தற்போது 'முக்கிய பதவியை' பெற்றுள்ள ஒரு மாஜி அமைச்சருக்கு ஒரு முக்கிய அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது சசிகலா டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டு இருக்கும் நிலையில் அவர்கள் ஆதரவாளர்களையே கொண்டு வருவதுதான்.

அமமுக நிர்வாகிகள்
தென் மாவட்டங்களில் அமமுக பலமாக உள்ள தொகுதிகளில் இருக்கும் அமமுக முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் சசிகலா தரப்பு ஆதரவாளர்களை தங்கள் தரப்புக்கு கொண்டுவர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து அரசியல் ரீதியிலும் சமுதாய ரீதியிலும் அவர்களை இழக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது சசிகலா புரட்சி பயணம் தொடங்க இருக்கும் நிலையில் விரைவில் சேலம் அல்லது சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா டிடிவி தினகரன் தரப்பு நிர்வாகிகள் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications