மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்படணும்.. எடப்பாடி பழனிசாமி விவகாரத்தில் வாய் திறந்த தினகரன்
சென்னை: கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லையென்றால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி ஷாக்
இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை இணைக்க சதி நடப்பதாகஅதிமுக குற்றம்சாட்டி வருகிறது. அண்மையில் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் நடக்கும் விசாரணைகள் பார்த்தால் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க முயற்சி நடப்பதாகவே அதிமுக மேலிடம் கருதுகிறது. இதனால் அதிமுக தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.

டிடிவி தினகரன் கருத்து
இந்நிலையில் கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லையென்றால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார். திருச்சி அ.ம.மு.கவின் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

என்ன அர்த்தம்
அப்போது அவர் கூறுகையில், "நதியினில் வெள்ளம் கரையினில் சிரிப்பு என்கிற பாடலில் ஓ.பி.எஸ் கூறிய இறைவன் யார்? அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பது தெரியவில்லை. அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

மடியில் கனமில்லை
ஒ.பி.எஸ் திருந்தி வந்தால் பரதனாக ஏற்றுக் கொள்வோம் என்று முன்பு கூறினேன். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள். கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை.

பெருந்தன்மை வேண்டும்
ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்புது தேவையற்றது. ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்வது தான் பெருந்தன்மையான அரசாக இருக்க முடியும். ஆனால் அதை தற்போதுள்ள அரசிடம் எதிர்பார்க்க முடியாது.சசிகலா தொண்டர்களை சந்திப்பாரா என்கிற கேள்விக்கு அவருடைய திட்டம் குறித்து அவரிடமே கேட்டு கொள்ளுங்கள்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications