சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமாக கரைகிறதா அமமுக.. ஓபிஎஸ் பக்கம் தாவ என்ன காரணம்?

தேனி அமமுக நிர்வாகி அதிமுகவில் நேற்று இணைந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுகவின் தங்கதமிழ்ச் செல்வன், புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்டோர் அதிமுகவில் இணையப்போகிறார்களா?

    சென்னை: தேர்தல் ரிசல்ட் வந்ததில் இருந்தே அதிமுக, அமமுகவுக்குள் என்னதான் நடக்கிறது என்றே தெரியவில்லை. இரு கட்சிகளுமே தனித்தனி தோல்விகளால் துவண்டு போயுள்ளனர். இதன் காரணமாக அணி தாவல், கட்சி தாவல், என்பதெல்லாம் சர்வசாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டது!

    நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வென்றது. ஆட்சியை தப்ப வைக்க, சொல்லி வைத்ததுபோல், இந்த வெற்றி அமைந்தது எப்படி என்பது வேறு விஷயம். ஆனால் அமமுக டெபாசிட்டை கூட வாங்காதது பெருத்த ஷாக்!

    எம்பி தேர்தல் இல்லாவிட்டாலும், இடைத்தேர்தலில் எப்படியும் அமமுக ஓரளவு வாக்கு வங்கியை தக்க வைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பூத் ஏஜெண்ட் போட்ட ஓட்டே என்ன ஆனது என்ற தெரியாத நிலையில், அவரது தோல்வியும் எதிர்பாராத ஒன்றுதான்!

    ஓஹோ.. இதுதான் விஷயமா.. அதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி இல்லையா?ஓஹோ.. இதுதான் விஷயமா.. அதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி இல்லையா?

    தினகரன்

    தினகரன்

    இருந்தாலும், அமமுகவில் இந்த 2 வருடமாக இருந்தவர்களில் பலர் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக பதவி இழந்த எம்எல்ஏக்கள். இவர்களுக்கு பதவி போய், தொகுதியில் நன்மதிப்பு போய், இப்போது தேர்தலிலும் தோற்று எதிர்காலம் இன்றி உள்ளனர். இதற்கு காரணம் தினகரன்தான் என்று ஒரேயடியாக அவர் மீதும் பழி போட்டு விட முடியாது என்றாலும், அடுத்தது என்ன செய்வது என்ற கேள்வி அமமுகவில் உள்ள பலருக்கு எழுந்து வருகிறது.

    முக்கிய நபர்கள்

    முக்கிய நபர்கள்

    ரிசல்ட் வரும்வரை அதிமுகவில் உள்ளவர்கள், அமமுகவுக்கு வரப்போகிறார்கள், உள்ளடி வேலைகள் நடந்து வருகிறது, முக்கிய நபர்களை கட்டம் கட்டி அமமுகவுக்குள் நுழைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றெல்லாம் செய்திகள் கசிந்தன. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாகி விட்டது!

    தங்க தமிழ்செல்வன்

    தங்க தமிழ்செல்வன்

    அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவ முடிவு செய்துள்ளார்கள். இதில் ஒரு குரூப் அந்த பக்கம் போய்விட்டது. கூடலூர் முன்னாள் சேர்மன் அருண்குமார் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார். இவர் தங்க தமிழ் செல்வனின் தீவிர ஆதரவாளர் ஆவார். அதனால் ஓபிஎஸ் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தே விட்டார். இது அமமுக தரப்புக்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

    தினகரன் வலதுகரம்

    தினகரன் வலதுகரம்

    தேனியின் சிங்கம், தினகரனின் வலதுகரம் என்று சொல்லப்பட்ட தங்க தமிழ்செல்வன் டெபாசிட்கூட வாங்காததுதான் இப்படி கட்சி மாற்றத்துக்கு காரணம் என்றும் தெரிகிறது. அது மட்டுமில்லை, தேனியில் ஓபிஎஸ்-ன் பலம்தான் அதிகம் என்றும் நினைக்கிறார்கள். இந்த விஷயம் இதோடு நிற்கவில்லை. இப்படி அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி தாவி உள்ளது, மற்ற அமமுகவினரையும் யோசிக்க வைத்துள்ளது. இதையே சாக்காக வைத்து அதிமுகவும் அதிருப்தி அமமுகவினரை தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் இறங்கும் என்று சொல்லப்படுகிறது.

    சசிகலா

    சசிகலா

    சிறையில் தினகரன் சசிகலாவை சென்று பார்த்தபோது, "இருக்கும் ஆதரவாளர்களை எப்படியாவது கட்சியிலேயே தக்க வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இப்படி ஒவ்வொருத்தராக தாய்க்கழகத்தில் இணைய ஆரம்பித்துள்ளது அதிமுக பலம் சேர்க்குமா என தெரியவில்லை, ஆனால் அமமுகவுக்கு நிச்சயம் சோர்வை தரும்!

    English summary
    The main supporter of the AMMK has joined with its supporters in the presence of O Panneerselvam. This is a big shock for the AMMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X