புளியந்தோப்பு விவகாரம்.. 2 உதவி பொறியாளர்கள் சஸ்பெண்ட் : தீவிரமாகும் நடவடிக்கை?
சென்னை: புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிட விவகாரம் தொடர்பாக 2 உதவி பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மூத்த அதிகாரிகள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளது.
இந்த குடியிருப்பின் கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதும், உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன என்பது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மிக மோசமான கட்டிடம்
கட்டடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து மோசமான நிலையில் இருப்பதாக கூறிய குடியிருப்புவாசிகள் கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த அடுக்குமாடி கட்டிடம் 2016-ல் அதிமுக ஆட்சியில் ரூ.112 கோடியே 60 லட்சம் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 864 வீடுகள் இருக்கின்றன.இந்த கட்டிடத்தின் அவல நிலை குறித்து முதன் முதலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்திருந்தார்

அமைச்சர் நேரில் ஆய்வு
இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சீமான், கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் உள்பட பலர் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த விவாகரம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். முன்னதாக மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்பு கட்டிடத்தை குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், கட்டிடத்தின் குடியிருப்பு கட்டிடத்தின் தரத்தை சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு குழுவினரின் ஆய்வறிக்கையை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் எதிரொலித்தது
இதற்கிடையே குடிசை மாற்று வாரியம் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படியும் எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் நேற்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 'இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரரோ, அதிகாரிகளோ யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டசபையில் உறுதி அளித்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
இதற்கிடையே அவல நிலைக்கு உள்ளான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகினறன. இந்த நிலையில் புளியந்தோப்பு கட்டிட விவகாரம் தொடர்பாக 2 அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆராயாமல் நடவடிக்கை வழங்கிய உதவி பொறியாளர்கள் பாண்டியன், அன்பழகன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே கட்டுமானத்தின் உறுதித்தன்மை குறித்து . ஐஐடி குழுவினர் சோதனை இன்று நடத்த உள்ளனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications