புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு.. குஜராத் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்த தமிழக அரசு
குஜராத்தில் நடைபெறும் இரண்டு நாள் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மாநாட்டிற்கு அழைப்பு வந்தபோதும் அதில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: குஜராத்தில் நடைபெறும் இரண்டு நாள் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. இந்த மாநாட்டில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கல்வித்துறை செயலாளர்கள் உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை. மாநாட்டிற்கு அழைப்பு வந்தபோதும் அதில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், தேசிய அளவில் கல்வி அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு குஜராத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சர்களும் மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதம்
குஜராத்தில் நடைபெறும் இந்த கல்வி மாநாட்டில், புதிய கல்விக் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மாநாட்டில் பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கிறார். இந்த 2 நாள் மாநாட்டில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.

தமிழகம் எதிர்ப்பு
இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாநில அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் தமிழகம் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை புதிய கல்வி கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்க்கவித்துறை அமைச்சர் பொன்முடி, மற்றும் துறை செயலாளர்களும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

பொன்முடி கேள்வி
நேற்றும், நேற்று முன்தினமும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதம் எழுந்தது. 3,5,8ம் வகுப்புகளுக்கு கூட பொதுத்தேர்வு நடத்தக்கூடிய நிலை புதிய கல்வி கொள்கையில் இருக்கிறது இதை எல்லாம் எப்படி ஏற்க முடியும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார். அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய கருத்துக்கள் ஏற்கக்கூடிய நிலையில் இல்லை என்பது தமிழகத்தின் கருத்தாக உள்ளது.

பங்கேற்கப்போவதில்லை
இத்தகைய சூழ்நிலையில் குஜராத்தில் நடைபெறும் 2 நாள் மாநாட்டை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. மாநாட்டிற்கு அழைப்பு வந்தபோதும் அதில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications