• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திடீர்னு உதயநிதிக்கு என்னாச்சு.. ஸ்டாலினிடம் ஸ்ரைட்டாகவே "அந்த" விஷயத்தை சொன்னாராமே.. உண்மையா?

|

சென்னை: உதயநிதி ஸல்டாலின் திடுதிப்பென்று ஒரு முடிவு எடுத்ததாக கூறி ஒரு வதந்தியை சிலர் கிளப்பிவிட்டு விட்டனர்.. அது உண்மையா, பொய்யா, வதந்தியா, யூகமா, என எதுவுமே புரியாத நிலையில், உடன்பிறப்புகள் பெருங் குழப்பத்தில் தவித்து வந்த நிலையில், இது முற்றிலும் வதந்தியே என்பது தற்போது தெரியவந்துள்ளது.. இதற்கான விளக்கமும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதியை பொறுத்தவரை, மிக வேகமாக கட்சிக்குள் வந்தவர்.. எந்த அளவுக்கு உள்ளே நுழைந்தாரோ, அந்த அளவுக்கு உச்சத்தை எட்டிப்பிடித்தார்.. சில சீனியர்களின் அதிருப்தி, வருத்தம், கவலைகளுக்கு நடுவே உதயநிதியின் வளர்ச்சி சென்று கொண்டே இருந்தது.

தூங்கி வழிந்து கொண்டிருந்த இளைஞரணியை தட்டி எழுப்பி, ஓட வைத்தவரும் உதயநிதிதான்.. இளைஞர்களுக்கான முக்கியத்துவம் கட்சியில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் இவர் கொண்டிருப்பதால்தான், பல மாவட்டங்களில் நிர்வாகிகள் பலருடன் இணக்கமான போக்கும் இல்லாமல் உள்ளது.

 கூட்டணிகள்

கூட்டணிகள்

இஷ்டத்துக்கு பேட்டி தருகிறார், கூட்டணிகளை மதிப்பதில்லை. யாரையும் கலந்து ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உதயநிதி மீது வைக்கப்பட்டு வந்தாலும், தன் கவனம் மொத்தத்தையும் நடக்க போகும் தேர்தலிலேயே குவித்து வைத்திருந்தார்.. இவருக்கு ஆலோசனை சொல்லக்கூட ஒரு டீம் தனியாக வைத்திருப்பதாக செய்திகள் கசிந்தன.. அதனடிப்படையில்தான், பிரச்சாரங்களில் களை கட்டி வருகிறார்.

 குஷ்பு

குஷ்பு

எப்படியும் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதிகளில் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது... இவருடன் நேரடியாக மோதுவதற்கு குஷ்பு எப்போதோ ரெடியாகிவிட்டார். இப்படிப்பட்ட சூழலில்தான் திடீரென ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.. தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற ஒரு முடிவை எடுத்துள்ளாராம் உதயநிதி..

 எம்எல்ஏ

எம்எல்ஏ

மாறாக, ஸ்டாலினை முதல்வராக்குவதே தன்னுடைய லட்சியம் என்றும், தான் இப்போது எம்எல்ஏவாவது முக்கியமில்லை என்றும் கருதுகிறாராம்.. ஆனால், கட்சியின் வளர்ச்சிக்காகவும், தன் அப்பா ஸ்டாலின்போல் இன்னும் கட்சி பணி செய்து படிப்படியாக வளர விரும்புவதாகவும் ஸ்டாலினிடமே நேரடியாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரச்சாரம்

பிரச்சாரம்

"கட்சிக்காக உழைத்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அங்கீகரிக்க வேண்டும், எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்டால் ஒரே தொகுதியில் பிரச்சாரத்திற்காக முடங்க நேரிடும், எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களை முதல்வராக்கி திமுக ஆட்சியை பிடிக்க தான் எந்த தியாகத்தையும் செய்ய தயார்.. தொண்டனாக இளைஞர் அணியின் செயலாளராக இருக்கவே விரும்புகிறேன்... தேர்தல், பதவி, அங்கீகாரம் எதுவும் எனக்கு இப்போது வேண்டாம்.. " என்ற உறுதியான வார்த்தைகளையும் ஸ்டாலினிடம் உதயநிதி பேசியதாக சொல்லப்படுகிறது.

 திடீர் முடிவு

திடீர் முடிவு

அதுமட்டுமல்ல, இந்த முடிவை, தன்னுடைய இளைஞர் அணியின் முக்கிய நிர்வாகிகளுடனும் உதயநிதி பேசியிருக்கிறார்.. இதைக்கேட்டு, இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு ஆச்சரியத்தில் அதிர்ந்து போய் உள்ளனர்.. எல்லாம் நல்லாதானே போய்ட்டுஇருக்கு? எதற்காக இந்த முடிவை உதயநிதி உண்மையிலேயே எடுத்தார் என்ற தகவல் தெரியவில்லை..ஒருவேளை ஸ்டாலின் வாரிசு அரசியல் செய்வதாக கூறிவரும் அதிமுக கூட்டணி தலைவர்களின் விமர்சனத்தை உடைக்கும் திட்டமாக இது இருக்கலாம் என்கிறார்கள்..

 விருப்ப மனு

விருப்ப மனு

எப்படி பார்த்தாலும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த நிலையில், கட்சிக்காக தான் போட்டியிட வேண்டாம் என உதயநிதியின் முடிவு பரபரப்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது. உதயநிதியை போட்டியிட சொல்லி ஸ்டாலினே வலியுறுத்தினாலும் சரி, தனது முடிவில் உதயநிதி உறுதியாக இருப்பதாக தெரிகிறது..

 சலசலப்பு

சலசலப்பு

இத்தனை நாள் பிரச்சாரம் செய்து, தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து வரும் உதயநிதியின் இந்த முடிவு திமுக வட்டாரத்தில் சலசலப்பை தந்து வருகிறது..எனினும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், திமுகவின் வெற்றிக்காக தன்னுடைய அடுத்தக்கட்ட பிரச்சாரத்தை நோக்கி முழு கவனத்தையும் திருப்பி வருகிறாராம் உதயநிதி..!

 
 
 
English summary
Udayanidhi Stalin is said not to be contesting in this election
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X