Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுவே தீர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வரலாற்று சிறப்புக்குரியது.. நெகிழ்ந்து போன உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை : சமுதாயத்தின் இழிவுகளை அகற்ற-பிளவுபடுத்தும் சக்திகளை வீழ்த்த சாதி ஒழிப்பே தீர்வு. அதனை உறுதிப்படுத்தும் வகையில், சாதி வேறுபாடற்ற மயானங்களை கொண்டிருக்கும் கிராமங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு வரலாற்று சிறப்புக்குரியது என்று உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பாராட்டி உள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7ஆம் தேதி பதவியேற்றது. அப்போது முதல் பல்வேறு அதிரடியான விஷயங்களை செய்து வருகிறது‌. தலைமைச் செயலாளர் நியமனம் முதல் அரசு ஒப்பந்தங்கள் வரை பல்வேறு விஷயங்களில் எடுத்த நடவடிக்கைகள் வரவேற்பு பெற்றன.

தமிழகத்தில் முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் தனது முதல் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இடம்பெறச் செய்தார். குறிப்பாக தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக வேளாண் பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்ய வைத்தார்.

பல்வேறு அறிவிப்பு

பல்வேறு அறிவிப்பு

பட்ஜெட் உரை தாக்கலான பின்னர் , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது . அந்தத் துறையின் அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள் .அது வெறும் முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110ன் சிறப்பு திட்டங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் . அப்படி அறிவித்த பல திட்டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன . குறிப்பாக இலங்கை தமிழ் அகதிகளை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார் . மேலும் பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள் ஆக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார். வ உ சிதம்பரனார் பெயரில் கப்பல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதேபோல் பல்வேறு சிறப்பு அறிவிப்களை வெளியிட்டு வருகிறார்.

ஆதிதிராவிடர்கள்

ஆதிதிராவிடர்கள்

சட்டசபையில் புதன்கிழமை(இன்று) ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், "திமுக அரசு என்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பாடுபடும் அரசாக இருக்கிறது. சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அன்பால் அரவணைப்போம். ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தன்னாட்சி அதிகாரத்துடன் அமைக்கப்படும் நல ஆணையத்திற்குத் தேவையான தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

கூடுதல் நீதிமன்றங்கள்

கூடுதல் நீதிமன்றங்கள்

அதேபோல மாநிலம் முழுவதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கூடுதலாக நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இந்த கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைவாக விசாரிக்க முடியும்

10 லட்சம் பரிசு

10 லட்சம் பரிசு

சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக அளிக்கப்படும். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில், பள்ளிக் கல்வித்துறை எந்த விதத்திலும் தலையிடாது. மேலும், மாநிலத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும்" இவ்வாறு தெரிவித்தார்.

பலரும் பாராட்டு

பலரும் பாராட்டு

அதாவது சாதி வேறுபாடற்ற மயானங்களை கொண்டிருக்கும் கிராமங்களுக்குத்தான் 10லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, தமிழக கிராமங்களில் சாதிப் பாகுபாடு அதிகரித்து வருவதாகப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், சாதி ஒழிப்பில் முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்குப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதை சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளார்கள்.

சாதி ஒழிப்பே தீர்வு

சாதி ஒழிப்பே தீர்வு

சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், சமுதாயத்தின் இழிவுகளை அகற்ற-பிளவுபடுத்தும் சக்திகளை வீழ்த்த சாதி ஒழிப்பே தீர்வு. அதனை உறுதிப்படுத்தும் வகையில், சாதி வேறுபாடற்ற மயானங்களை கொண்டிருக்கும் கிராமங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு வரலாற்று சிறப்புக்குரியது என்று உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பாராட்டி உள்ளார்.

குடியுரிமை

குடியுரிமை

இதனிடையே உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்த இன்னாரு ட்வீட்டில் "மதத்தைக் கொண்டு குடியுரிமையை தீர்மானிக்கும் குடியுரிமை திருத்தச்சட்டம் 2019-க்கு எதிராக மாண்புமிகு முதல்வர் அவர்கள் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம், திமுக அரசு என்றென்றும் சிறுபான்மையினருக்கும் - அரசியலமைப்பு சட்டத்துக்கும் அரணாக நிற்கும் என்பதை உறுதி செய்துள்ளது. நன்றி". என்ற கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+