சென்னையில் கட்டுக்கடங்காத கொரோனா பரவல்... கட்டுப்பாடுகளை கடுமையாக்கக் கோரும் நிபுணர்கள்
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வீரியம் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் , பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் சென்னையை பொறுத்தவரை மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சென்னையில் வீரியம்
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா பரவலின் தாக்கம் வீரியமாக உள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு குறையாமல் கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக பார்க்கப்படுவது நெருக்கடியான இடத்தில் மக்கள் அடர்த்தியாக வாழ்வது தான். சென்னையை பொறுத்தவரை காற்றை விட வேகமாக கொரோனா பரவுவதால் மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.

தீவிர முயற்சி
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதோடு, தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் குழுவையும் களமிறக்கியுள்ளது. மேலும், மண்டலம் வாரியாக கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 5 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மெத்தனம்
கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்குமாறு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாது சாலைகளில் சுற்றுவோர் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். கொரோனா நம்மை ஒன்றும் செய்துவிடாது என்ற அதீத நம்பிக்கையும், மெத்தனமுமே இதற்கு காரணம். தொடக்கத்தில் நோயாளியின் பயண வரலாறு மூலம் தொற்றுக்கான காரணம் கண்டறியப்பட்டது. ஆனால், இன்றுள்ள சூழலில் யார் மூலம் பரவுகிறது என்பதை கண்டறிய முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு
சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் நோய் பரவல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். மற்ற மாவட்டங்களில் உள்ள தளர்வுகள் போல் சென்னைக்கு தளர்வு அளிக்கப்படக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், பொதுவிடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications