சேது கால்வாய் திட்டம்: ராமர் பாலம் இல்லை-நாடாளுமன்றத்தில் அறிவித்த மத்திய அரசு-களமிறங்கிய தமிழ்நாடு!
சென்னை: கடலுக்கு அடியில் ராமர் பாலம் இருக்கிறதா என்பதை அடையாளம் காணுவதில் சிரமம் உள்ளது என நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய பாஜக அரசு அறிவித்தது. இதனடிப்படையில்தான் இன்று தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி அல்லது பாக் நீரிணை இடையே இடையே தொடர்ச்சியான சுண்ணாம்பு கற்களால் ஆன மேடுகள் அமைந்துள்ளன. குறைந்த ஆழத்தில் இருக்கும் இந்த சுண்ணாம்பு மேடுகள் ஒரு பாலம் போல தோற்றம் தருகின்றன. ஆகையால் இதனை புராண இதிகாசமான ராமாயணத்துடன் இணைத்து, கடவுள் ராமரால் சீதையை மீட்க கட்டப்பட்ட ஒரு பாலம் என நம்ப்பப்பட்டது. சீதையை ராவணன் கடத்தியதாகவும் இலங்கையில் ராவணன் பிடியில் இருந்த சீதையை மீட்க அனுமான் உள்ளிட்ட வானரப் படை உதவியுடன் பாலம் கட்டினார் கடவுள் ராமன் என்பதும் இதன் பின்னணியில் உள்ள புராண செய்தி; இந்துமத நம்பிக்கை.
கடவுள் ராமர் கட்டியதுதான் இந்த பாலம் என்பதற்கான எதுவித சான்றுகளும் இல்லை. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பால விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதாவது தமிழகத்தின் மிக நீண்டகால கோரிக்கை சேதுசமுத்திர கால்வாய் அமைக்க வேண்டும் என்பதுதான். வங்க கடலில் பயணிக்கும் கப்பல்கள் இலங்கையை சுற்றித்தான் சென்னை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ராமர் பாலம் பகுதியை ஆழப்படுத்தினால் சுமார் 400 கிமீ கடல்வழி, சுமார் 30 மணிநேர பயண செலவு குறையும். இதுதான் சேது கால்வாய் திட்டம் என்பது.

ஆனால் ராமர் பாலத்தின் பெயரால் தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அடிநாதமாக திகழ்ந்திருக்க வேண்டிய சேது கால்வாய் திட்டம் முடக்கப்பட்டது. இந்த சர்ச்சையின் போது ராமர் என்ற ஒரு கடவுள் இருந்தாரா? அவர் பாலம் கட்ட எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார் மறைந்த முதுபெரும் திராவிடர் இயக்க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி. இதற்காக அவரது தலைக்கு விலை நிர்ணயித்து தலையை வெட்ட சொன்னது இந்துத்துவா கோஷ்டி. பின்னர் நீதிமன்ற தலையீடுகளால் சேது சமுத்திர கால்வாய் திட்டம் முடங்கிவிட்டது.
இந்தப் பின்னணியில் கடந்த மாதம் ராஜ்யசபாவில் பாஜக எம்பி கார்த்திகேய சர்மா ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது, ராமர் பாலம் தொடர்பாக அறிவியல் ரீதியான ஆய்வு நடத்துவது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் அளித்த பதில்: ராமர் பாலம் தொடர்பாக விண்வெளி துறையினர் ஆய்வு நடத்தினர். ராமர் பாலம் என்பது சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்கிற நம்பிக்கை உள்ளது. ராமர் பாலம் எனப்படும் பகுதியை செயற்கைக்கோள் படம் பிடித்தது. இந்த செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் ராமர் பாலம்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றார்.
மத்திய பாஜக அரசே, ராமர் பாலம் இருப்பதாக உறுதியாக கூறாத நிலையில் உடனேயே தமிழ்நாட்டில் சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற குரல் எழுந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதனை தொடர்ந்து வலியுறுத்தினார். நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளமும் சேது கால்வாய் திட்டம் தொடர்பாக தமிழக அரசு முன்னெடுப்பை எடுக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஏற்கனவே பதிவிட்டிருந்தது.இந்நிலையில்தான் தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரும் தீர்மானத்தை இன்று தாக்கல் செய்து நிறைவேற்றினார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications