சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படியா மாநில உரிமையை பறிப்பது?.. தமிழக அரசு கண்டிக்கணும்.. தொல். திருமாவளவன் ஆவேசம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசு பணிக்கு அழைத்துக்கொள்ளலாம் என பாஜக அரசு திருத்தம் கொண்டுவரவுள்ளது மாநில உரிமையை பறிக்கும் செயல் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என பாஜக அரசு கொண்டுவரவுள்ள திருத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த அரசு பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.. நடந்தது என்ன?நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த அரசு பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.. நடந்தது என்ன?

 மாநில உரிமையைப் பறிக்கும்

மாநில உரிமையைப் பறிக்கும்

மாநில உரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று அவர் கூறியுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகள் 1954 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன.

 மாநில அரசின் சம்மதம் இருக்கனும்

மாநில அரசின் சம்மதம் இருக்கனும்

மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிகளுக்கு அழைப்பதென்றால் மாநில அரசின் சம்மதத்தோடு அதைச் செய்து கொள்ளலாம் என இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954 இல் விதி-6 குறிப்பிடுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இதுவரை அதுவே நடைமுறையில் உள்ளது.

அச்சத்தில் வைத்திருக்கும்

அச்சத்தில் வைத்திருக்கும்

ஆனால் இப்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசு இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என விதி-6 இல் திருத்தம் செய்வதற்கு பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவ்வாறு செய்வது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். அதுமட்டுமின்றி எப்போது நம்மை டெல்லிக்கு மாற்றல் செய்வார்களோ என இந்த அதிகாரிகளை அச்சத்திலேயே வைத்திருப்பதாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

சீர்குலைக்கும் கருவி

சீர்குலைக்கும் கருவி

மத்திய அரசை ஆட்சி செய்யும் கட்சி அல்லாத வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளை சீர்குலைப்பதற்கும் இது கருவியாக அமைந்துவிடும். எனவே இந்த ஆபத்தான நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறு இந்திய மத்திய அரசை வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளும் இதற்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

English summary
viduthalai siruthai katchi leader Thirumavalavan has said that the BJP government's amendment to allow IAS, IPS and IFS officers to be recruited by the central government at any time is an act of usurpation of state rights
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X